ஜெயிலர் 2 கன்ஃபார்ம்..! ரஜினியுடன் கைக்கோரக்கும் விஜய்..? வெளியானது பரபர தகவல்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.   

Written by - Yuvashree | Last Updated : Aug 16, 2023, 05:50 PM IST
  • ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்.
  • இதில் ரஜினியுடன் விஜய் கைக்கோர்க்க உள்ளதாக பேசப்படுகிறது.
  • இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஜெயிலர் 2 கன்ஃபார்ம்..! ரஜினியுடன் கைக்கோரக்கும் விஜய்..? வெளியானது பரபர தகவல்..!  title=

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நெல்சன் திலீப்குமார்..

டார்க் காமெடி படங்களை இயக்கி வெற்றி இயக்குநர்களின் பட்டியிலில் இடம் பெற்றவர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு காேகிலா, டாக்டர் போன்ற படங்களில் இவருக்கு கைக்கொடுத்த இந்த வித்தியாசமான கதை பாணி, கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தில் கழட்டி விட்டுவிட்டது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் இப்படத்தை நெகடிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் வருத்தெடுத்தனர். இதையடுத்து, நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்கி வந்தார். இந்த படம் என்னாகுமோ என பயந்த ரசிகர்கள் தற்போது பெருமூச்சு விடும் வகையில் அவர்களை ஏமாற்றாமல் நேர்த்தியான கதையை கொடுத்துள்ளார், நெல்சன். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தை பின்னுக்குத்தள்ளிய ஜெயிலர்..! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..!

ஜெயிலர் திரைப்படம்: 

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் பல பான் இந்திய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் இதில் கெளரவ தோற்றத்தில் வந்தனர். ரஜினியின் மகன் வேடத்தில் விஜய் வசந்தும், மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இரண்டாம் பாகம்…

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஆயத்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் ஜெயிலர் படத்தில் நடித்த சில நடிகர்கள் அதன் இரண்டாம் பாகத்திலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் புதிதாக நடிகர் விஜய்யையும் நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பாரா..? 

நடிகர் விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு கிடைத்திருந்த மோசமான வரவேற்பு, படக்குழு உள்பட பலரை அப்செட் செய்தது. ஆனாலும் விஜய்-நெல்சன் திலீப்குமார் அகிய இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஜெயிலர் படம் குறித்த மீட்டிங்கிற்கு செல்வதில் இருந்து அப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பது வரை, நடிகர் விஜய் நெல்சனுக்கு துணை நின்றிருக்கிறார். இந்த தகவலை நெல்சனே ஒரு நேர்காணலிலும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அவரை ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்-ரஜினி ரசிகர்கள்தான் அடிக்கடி சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனரே தவிர, இவர்கள் இருவரும் நல்லுறவையே பேணுகின்றனர். இந்த நிலையில், விஜய் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பாரா இல்லையா என்பது இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானவுடன்தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வசூல்: 

ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. கடந்த 5 நாட்களில் இப்படம் 400 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் 2 படம் தக்க வைத்து கொண்டிருந்தது. ஆனால், தற்போது அதை ஜெயிலர் படம் முறியடித்துள்ளது. சுதந்திர தினமான நேற்று மட்டும் ஜெயிலர் திரைப்படம் 33 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | நடிகை சித்ராவின் மரணம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பரபரப்பு மனுத்தாக்கல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News