சீரியல் நடிகரை மணக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்?
செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் இதயத்தை திருடாதே சீரியலின் ஹீரோ நவீனை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.
செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களின் மனதைக் கவர்ந்த பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத் இவர்களின் வரிசையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக திகழ்ந்தவர் கண்மணி சேகர். இவரது தமிழ் உச்சரிப்பும் அழகும் ஏராளமான ரசிகர்களின் கட்டிப் போட்டு வைத்துள்ளது காவிரி டிவி, மாலைமுரசு, ஜெயா டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது சன் டிவியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க | ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவுக்கு பதில் இவரா? ரியல் ஜோடி கைகொடுக்குமா?
இவருக்கு பட வாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகள் பல வந்தும் இவர் அதனை மறுத்து விட்டு தனது செய்தி வாசிப்பாளர் பணியையே தொடர்கிறார். பல ரசிகர்களே கொண்டிருக்கும் இவரின் திருமணம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. கலர்ஸ் தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'இதயத்தை திருடாதே' சீரியல் சிவா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நவீனை, இவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பேசப்பட்டு வருகிறது. இதனை இருவரும் உறுதிப்படுத்தும் விதமாக அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
செய்தி வாசிப்பாளர் கண்மணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ஃபேமிலி என குறிப்பிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களின் உறவை உறுதிப்படுத்திவிட்டனர். அதனையடுத்து மேலும் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக நவீன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்மணி மற்றும் அவரது குடும்ப பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து சில வசனங்களுடன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் இருவரும் மேட்சிங்காக கருப்பு நிறத்தில் உடையணிந்து ஒன்றாக நிற்கும் புகைபடங்களை வெளியிட்டு பின்னணியில் 'உன்ன என் கண்ண போல பாத்துக்க போறேன்' பாட்டையும் இணைத்து இருந்தார். இந்த புகைப்படத்தை கண்மணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இதய எமோஜியை சேர்த்து இருந்தார்.
இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் என்றும், இது காதல் திருமணம் இல்லை, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இவர்களது திருமணம் குறித்து நீண்ட நாட்கள் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் திருமணம் நடக்கலாம் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கிறது, விரைவில் தனது திருமண தேதி குறித்த தகவலை கண்மணி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ”நான் போராளி... பாதிக்கப்பட்டவள் அல்ல” விமர்சிப்பவர்களை துவம்சம் செய்த பாவனா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR