ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் படம் “பிரேக்கிங் நியூஸ்”. படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்டில், மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில், “சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக  திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது. ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய  ஆக்‌ஷன் காட்சிகளில், டூப் பயன்படுத்தாமல் நடித்தார்.


படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாகவும், எளிதாகவும் படமாக்க முடிந்தது” என்றார்.



இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பாடலாசிரியர் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா, மோகன்ராம், தேனப்பன், பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள். 


மேலும் படிக்க | 'ரஜினி- 169' ட்ராப்பா?! - ரஜினிகாந்த் சொல்வது என்ன?!


ஜானி லாலும், செவிலோராஜாவும் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்கும் இப்படத்துக்கு கலை இயக்குநராக மகேஷ் பணியாற்றுகிறார்.


மேலும் படிக்க | பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சினிமாவின் முன்னோடி ராமராவ் காலமானார்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR