நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த இந்தப் பிரம்மாண்ட திருமணத்தில் திரையுலகினர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்று இன்றுடன் சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்  பதிவுகளை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதன்படி,  நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் விருந்தினர்களாகக் கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினி மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


வெள்ளை ஜிப்பா உடையுடன் வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த், அலங்காரத்தோடு நின்றிருந்த மணமகள் நயன்தாராவின் கைகளைப் பிடித்து வாழ்த்து தெரிவிப்பது போன்று அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது. மற்றொரு புகைப்படத்தில் நடிகர் ஷாருக்கானும் நயன்தாராவும் கட்டி அணைத்தபடி காட்சி தருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.




 


இவர்களது திருமண நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் திருமணம் தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில்தான் விக்னேஷ் சிவனே இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


மேலும் படிக்க | நயன்தாரா எனும் நம்பிக்கை நாயகி! - நயனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?!


 



தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்று  அண்மையில் இந்தியா திரும்பிய இந்த ஜோடி மீண்டும் சினிமா பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்தில் பிஸியாக உள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிக்கவுள்ள படம் தொடர்பான ஆரம்ப கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 


மேலும் படிக்க | மறுவீடு சென்ற நயன்தாரா... கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR