நூறு நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமையான நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். யார் அந்த டைட்டில் வின்னர்? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் எபிசோடு நேற்றிரவு ஒளிபரப்பானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியில் நேற்று முடிவடைந்த நிலையில் ராஜு (Raju Jeyamohan) டைட்டில் பட்டமும், பிரியங்கா (Priyanka Deshpande) இரண்டாவது இடமும் பெற்றார்கள். அதேசமயம் 3வது இடத்தை பாவனியும் பிடித்தார், வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீர் 4வது இடத்தையும், சவாலான போட்டியாளராக பார்க்கப்பட்ட நிரூப் 5வது இடத்தை பிடித்துள்ளது. 


ALSO READ | நடிகர் விஜய் நண்பர்களுக்கு உதவமாட்டாரா- சஞ்சீவ் ஓபன் டாக் !


இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளதாகவும், ஜனவரி இறுதி வாரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என்று பெரிடப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக ஓடிடி தளத்தை நேற்று சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு சீசன் போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியை கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.


13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், வனிதா, ஜூலி, அனிதா சம்பத் மற்றும் ஓவியா போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | பிக்பாஸில் ’ஹிப்ஹாப் ஆதி’ - போட்டியாளர்கள் மகிழ்ச்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR