RIP: இசை வானில் சிறகடித்துப் பறந்த கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் இசையுடன் ஐக்கியமானார்!
RIP To Legendary Singer Pankaj Udhas : நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பங்கஜ் உதாஸ் இன்று காலமானார்... இசையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றார் பங்கஜ் ஜி...
Death News From Bollywood: பிரபல கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார். அவரது மரணச் செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பங்கஜ் உதாஸ் இன்று காலமானார்... மக்களின் மனதில் என்றென்றும் நீங்கா வெற்றிடத்தை உருவாக்கிச் சென்ற மறைதிரு பங்கஜ் உதாஸ் பாடிய கஜல்கள் அழியா வரம் பெற்றவை. திரைப்படம் சாராத இசையில் இறங்கி அதை மிகவும் பிரபலமாக்கியவர் பழம்பெரும் பாடகர் பங்கஜ் உதாஸ் அவர்கள்.
எப்பொழுதும் பங்கஜ் உதாஸ் அவர்களின் கஜல்களை முனுமுனுத்துக் கொண்டிருக்கச் செய்த இனிமையான குரல் ஓய்வெடுக்க சென்றுவிட்டது. கானக்குரலோனின் மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். 72 வயதான பங்கஜின் மறைவுச் செய்தியை பிடிஐ. எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.
நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பங்கஜ் உதாஸ் மகள் நயாப் உதாஸ், இன்ஸ்டாகிராமில் தனது தந்தையின் மறைவுச் செய்தியை பதிவிட்டார். 'பத்மஸ்ரீ விருது பெற்ற பங்கஜ் உதாஸ் பிப்ரவரி 26, 2024 அன்று காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அப்பா நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்’ என்று அந்த செய்தி கூறுகிறது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
பங்கஜ் உதாஸ் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கஜல் பாடகர் இவ்வுலகில் இல்லை என்ற செய்தியை நம்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். நயாப் உதாஸின் பதிவில் கருத்துத் தெரிவித்த ரசிகர் ஒருவர், 'இதைக் கேட்க நான் என்ன பாவம் செய்தேனோ?’ என்று வருந்தினால் கடவுள் அவரது ஆத்மாவை சாந்தியடையச் செய்யட்டும் என ஆயிரக்கணக்கானவர்கள் பதிவிட்டுள்ளனர்.
சோனு நிகாம்
பங்கஜ் உதாஸின் மரணச் செய்தியைக் கேட்டு பாடகர் சோனு நிகம் மனம் உடைந்தார். கஜல் சாம்ராட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், 'என் குழந்தைப் பருவத்தின் மிக முக்கியமான பகுதி ஒன்று, இன்று இல்லாமல் போய்விட்டது. மதிப்பிற்குரிய பங்கஜ் உதாஸ் இனி இல்லை என்று என் இதயம் அழுகிறது. ஜகஜித் சிங், அனுப் ஜலோட்டா வரிசையில் என் பால்யத்தை கஜல் இசையால் நிரப்பியவர்களில் ஒருவர் பங்கஜ் உதாஸ்! நண்பர்களுடன் இரவு முழுக்க அவருடைய குரலை சுகித்த நினைவுகளை மறக்க முடியாது... ஓம் சாந்தி.' என்று வருத்தத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ