பருத்திவிரன் படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் செவ்வாழை ராசு, உடல் நலக்குறைவு காரணமாக அவரது 70ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் உயிரிழப்பு:


செவ்வாழை ராசு, தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர், உடல் நலன் சரியில்லாத காரணத்தினால் சில நாட்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனலிக்காத நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நடிகர் செவ்வாழை ராசுவின் குடும்பத்தினருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Rekha Birthday: “பல மலர் டீச்சர் வந்தாலும் நம்ம ஜெனிபர் டீச்சர் போல வருமா..”ரேகாவின் பிறந்தநாள் இன்று


பருத்திவீரன் பட நடிகர்:


அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் பலத்த பாரட்டுகளை பெற்றனர். அப்படி பாராட்டு பெற்ற நடிகர்களுள் ஒருவர், செவ்வாழை ராசு. இந்த படத்திற்கு பிறகு இவரது குரலுக்கென்றே பல ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். ஒவ்வொரு முறையும் இந்த படத்தில் ஹீரோ அவரது சித்தப்பாவுடன் சேர்ந்து இவரை கலாய்க்கும் சீன்களில் திரையரங்குகளில் அத்தனை சிரிப்பலைகள். “ஏய் என்னப்பா..” என்று மதுரை மொழியில் இவரது டைலாக் உச்சரிப்புகளும் பக்காவாக இருந்தன. 


விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்:


செவ்வாழை ராசு விவசாய குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர். இவர் சிகப்பாக இருந்ததால் செவ்வாழை என்ற பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டதாக ஒரு நேர்காணலில் அவரே கூறியுள்ளார். ராசு, சினிமாவிற்கு வந்தது பாரதி ராஜா படத்தின் மூலமாகத்தான். திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார். ராதிகா, விஜயகுமார், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான கிழக்கு சீமையிலே படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்திருந்தார், ராசு. 


அரசியலில் ஆசை...


நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக உயர்ந்த எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய ரசிகர் இவர். அவரின் அரசியல் கொள்கையையும் பின்பற்றினார். இதனால், இவருக்கு அரசியல் ஆசையும் இருந்ததாக அவரே சில நேர்காணல்களில் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இவர்களது குடும்பம் விவசாயம்தான் செய்து கொண்டிருந்ததாகவும் அதன் பிறகுதான் இவர் நடிக்க வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


உடல் நலக்குறைவு:


செவ்வாழை ராசு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், இவரது குடும்பத்தினர் ராசுவை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சிகிச்சைகள் எதுவும் பலனலிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். ராசுவின் உடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தை அடுத்த என்ற பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது. நாளை, செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


தொடர்ந்து உயிரிழப்புகளை சந்தித்து வரும் கோலிவுட்:


கோலிவுட் திரையுலகம் கடந்த சில மாதங்களாகவே பெரிய நடிகர்களை இழந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் மயில்சாமி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரைத்தொடர்ந்து நடிகர் மனோபாலாவும் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விவேக் உயிரிழந்தார். இதனால், தமிழ் திரையுலகை சோகம் தொடர்ந்து துரத்தி வருகிறது. 


மேலும் படிக்க | Aishwarya Rajesh: “ராஷ்மிகாவை நான் குறைகூறவில்லை..” புஷ்பா பட ஸ்ரீவள்ளி சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ