ஷங்கரின் அடுத்த பட ஹீரோயின் இவர்தானாம்- கதையும் ‘லீக்’ ஆயிடுச்சு!
ஷங்கர்- ராம் சரண் காம்போவில் உருவாகிவரும் படத்தின் கதாநாயகி மற்றும் கதை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.o திரைப்படத்துக்குப் பின்னர், தெலுங்குப் பக்கம் ஒதுங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
அந்த வகையில் நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படம், பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளது. பிரமாண்ட இயக்குநர்களாக உருவெடுத்துள்ள ராஜமெளலி பிரசாந்த் நீல் போன்றவர்களுக்கு சவால் விடும் வகையில் ஷங்கரின் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் பெயரிடப்படாத ராம் சரணின் 15ஆவது படமான இதற்கு தமன் இசையமைக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் படிக்க | ‘வசூல் மன்னன்’ என மீண்டும் நிரூபித்த விஜய்! - தொடர்ந்து 5ஆவது முறையாக ‘அந்த’ சாதனை!
இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபுவுடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘சர்க்காரு வாரி பாட்டா’ இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், இந்தத் தகவல் கசிந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி, தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படம், ஆக்ஷன் பொலிடிக்கல் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுவருகிறதாம். ஷங்கர்- ராம் சரண் காம்போவில் உருவாகும் இப்படத்தில் ராம்சரணுக்கு இரு ரோல்களாம். அதில் ஒன்றில், கிராமத்து விவசாயியாக அவர் நடிக்கிறாராம்.
கதையில் இரு நாயகர்கள் இருப்பதால்தான் கியாரா அத்வானியுடன் கீர்த்தி சுரேஷும் தற்போது இணைக்கப்பட்டுள்ளாராம். அடுத்த ஆண்டு கோடை விடுமுறை விருந்தாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR