சலார் படத்தின் முக்கிய அப்டேட்: வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சலார் திரைப்படம்:


பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ்,  தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார். Salaar Part 1: Ceasefire இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இந்த படத்தின் அறிவிப்பு முதல் தற்போது வரை எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.


மேலும் படிக்க | வேறு மொழிகளில் நடிக்க மாட்டேன்! பிரபல நடிகர் ஓபன் டால்க்!


சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை:


இந்நிலையில், சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சலார் படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் யுத்தம் தான் இந்த படத்தின் கதை என இயக்குனர் பிரஷாந்த் நீல் கூறியுள்ளார். இதனால் இந்த விஷயம் தற்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் கதையை கேட்ட பலர் இது போன்ற வந்திருக்கே என்று ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.



சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம், சமீபத்தில் துல்கர் நடித்து வெளியான கிங் ஆஃப் கோதா உள்ளிட்ட பல படங்கள் இதே கதை தான் என்று கூறி வருகின்றனர்.  


சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தின் டிரைலர்:


இதனிடையே தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அதன்படி சலார் படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி இரவு 7.19 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் டீசரே மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், தற்போது டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 



மேலும் படிக்க | விஜயகாந்த் உடல் நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை தகவல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ