சமந்தா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்! வெளியானது ட்ரைலர்! இயக்குனர்கள் யார் தெரியுமா?
வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை இந்தியாவில் பிரைம் வீடியோ வெளியிட்டது. சிட்டாடல் பிரிவில் வெளிவரும் இந்த வெப் தொடரை ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) இயக்கியுள்ளனர். ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர் மேனன் இதனை எழுதியுள்ளார். இந்த தொடரை டி2ஆர் ஃபிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ, ஏஜிபிஓவைச் சேர்ந்த ஆண்டனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ, ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட் மற்றும் ஸ்காட் நேம்ஸ், டேவிட் வெயில் (ஹண்டர்ஸ்) உடன் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக இணைந்து சிட்டாடல்: ஹனி பன்னி-ஐ தயாரித்துள்ளன. மிட்நைட் ரேடியோவும் ஒரு நிர்வாக தயாரிப்பாளராகும்.
மேலும் படிக்க | இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!
இத்தொடரில் திறமை வாய்ந்த வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாகவும், பல்துறை வல்லுநர் கே கே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் மற்றும் காஷ்வி மஜ்முந்தர் ஆகியோரை இணை நடிகர்களாகவும் நடித்துள்ளனர். இந்த சிட்டாடல்: ஹனி பன்னி பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 7ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. 90களின் துடிப்பான ஒரு திரைக்கதை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள உற்சாகமூட்டும் மற்றும் ஆவலைத் தூண்டும் இந்த ஸ்பை த்ரில்லரின் முன்னோட்டமாக இந்த டிரைலர் வெளி வந்துள்ளது. இதில் அதிரடி ஆக்ஷன், ஹை-ஆக்டேன் ஸ்டண்ட் மற்றும் இருக்கை நுனிக்கு நம்மை அழைத்துச் செல்லும் உற்சாகம் ஆகியவை நிறைந்துள்ளன.
“டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்குப் பின், நிகழ்ச்சியின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருண், சமந்தா மற்றும் ராஜ் & டிகே ஆகியோருடன் அவர்களது ரசிகர்களும் நவம்பர் 7ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் மனம் கவரும் வகையிலான சிட்டாடல்: ஹனி பன்னியின் வியக்கத்தக்க உலகத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட இதுவே சிறந்த நேரம் என நாங்கள் கருதினோம். ராஜ் & டிகே இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை த்ரில்லரில் எப்போதும் போலவே தங்கள் திறமையையும், அனைவரையும் கவரும் ஆற்றலையும் வெளிப்படுத்தி உள்ளனர், இது எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய த்ரில்லிங் நிறைந்த பயணமாக இருக்கும்,” என்று இந்தியாவின் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறினார்.
ராஜ் மற்றும் டி.கே கூறுகையில் "சிட்டாடல்: ஹனி பன்னி எங்களுக்கு ஒரு முக்கியமான பிராஜக்ட் ஆகும், இது இதுவரை முயலாத உளவாளிகள் மற்றும் உளவு பார்க்கும் உலகில் பயணிக்க எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது, நாங்கள் பல பிராஜக்ட்களைச் செய்திருந்தாலும், சிட்டாடல்: ஹனி பன்னி எங்கள் முதல் கூட்டுப்பணியாகும். இது ருஸ்ஸோ பிரதர்ஸ் போன்ற படைப்பாற்றல் சக்திகளுடனும், உலகெங்கிலும் உள்ள திறமையான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடனும் இன்னைந்து செயலாற்றும் அற்புதமான மதிப்புமிக்க படைப்பு அனுபவமாக அமைந்தது.” என்றனர்.
சமந்தா கூறுகையில், "மனங்கவரும் கதைக்களம், செழுமையான கதாபாத்திர ஆழம் மற்றும் சர்வதேச தரத்திற்கு போட்டியாக விளங்கும் சண்டைக்காட்சிகளுடன் ஒரு ஆக்ஷன் நிரம்பிய பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பும், இதில் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. இதிலுள்ள உளவு கதைகளின் தொகுப்பு, இந்த பிராஜெக்ட்டிற்குள் என்னை ஈர்த்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும். பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்கள் இந்தத் தொடரை முழுமையாக ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ரவீந்தர் குறித்த ‘இந்த’ உண்மை தெரியுமா உங்களுக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ