பிரின்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு:  சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் உலகளவில் நல்ல வசூலை பெற்று வெற்றி படமாக மாறியது.  தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைத்துள்ளார் தமன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பிம்பிலிக்கி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பின்னர் சத்யராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.



மேலும் படிக்க | 'புஷ்பா 2' படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்?


டாக்டர் மற்றும் டான் படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 21-ஆம்  தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.


இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ படத்தின் 2வது பாடலான ‘ஜெஸ்ஸிகா’ நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளது.




இதற்கிடையில் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அயலான் படத்தை கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விடுமுறை நாட்களில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய் படத்துக்காக பாலிவுட் வாய்ப்பை இழந்த நெல்சன் திலீப்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ