'புஷ்பா 2' படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்?

'புஷ்பா' படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 21, 2022, 10:23 AM IST
  • 'புஷ்பா' பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
  • இப்படத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது.
  • புஷ்பா இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
'புஷ்பா 2' படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்? title=

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.  கொரோனா தொற்று சமயத்தில் வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்தது, இந்த படத்தின் பாடல்களும், வசனங்களும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.  இப்படத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது.  பான் இந்தியன் படமான இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் போன்ற பெரிய நட்சத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | லைஃப்-ல எனக்கு இருக்க ஒரே ஃபீலிங் இதுதான் - வருத்தம் தெரிவித்த சுந்தர்.சி!

இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் 'புஷ்பா 2' படத்தின் ஸ்கிரிப்டை இயக்குனர் சுகுமார் முடித்துவிட்டதாகவும், ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது.  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, வெளிநாட்டில் படத்தின் கதை அமைக்கப்படும் என்றும், ஹீரோ புஷ்பராஜின் சந்தன வியாபாரம் உலகளவில் வளர்ச்சியடைந்ததாக கதை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.  

மேலும் இதில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்த ராஷ்மிகா கொல்லப்பட்டுவிடுவதாகவும், பின்னர் பாலிவுட் நடிகை ஒருவருடன் ஹீரோ காதல் வயப்படுவார்  என்று கூறப்படுகிறது.  'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பு சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  மீண்டும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க போகிறார்.  இதுவரை இந்திய சினிமாக்களில் பார்த்திடாத வகையில் 'புஷ்பா-2' படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 'விக்ரம்' படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News