சென்னை: டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று, அவர் நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.  


பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாவில்லை. இதுவரை நடித்திராத வித்தியாசமான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  



அதிரடி ஆக்சன், கலகலப்பான காமெடி, மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான திரைக்கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதன்முறையாக கே எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ் எல்வின் இணையும் படம் இது.  


தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக 15 அடி ராகவேந்திரர் சிலையை திறந்துவைத்தார் ராகவா லாரன்ஸ். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய பளிங்கு சிலை என்று அவர் தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.



திரைப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இயக்கும் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் கே எஸ் ரவிக்குமார்.


Also Read | ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR