நெல்சன் வேண்டுமா வேண்டாமா... ரஜினியை முடிவெடுக்க சொன்ன சன் பிக்சர்ஸ்?
நெல்சன் திலீப்குமாரை நம்பி படத்தை தொடங்கலாமா இல்லை வேறு இயக்குநரை இயக்க வைக்கலாமா என்ற முடிவை ரஜினியிடமே விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் சன் பிக்சர்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் போதிய வரவேற்பை பெறவில்லை. விஜய் என்ற ஒருவரை மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கும் நெல்சன் கதையில் கவனம் செலுத்தவில்லை என பலர் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, பெரிய ஹீரோ கொடுக்கும் வாய்ப்பை இளம் இயக்குநர் வீணடித்தால் அடுத்த இளம் இயக்குநர் மீது ஹீரோக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள் என சினிமா ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ரஜினியை வைத்து தயாரித்த அண்ணாத்தே படமும் கடுமையான விமர்சனத்தை சந்தித்ததால் அடுத்த ரஜினி படத்தை எப்படியாவது ஹிட்டாக்க வேண்டுமென்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மும்முரமாக இருக்கிறது.
மேலும் படிக்க | மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்!
ஆனால் பீஸ்ட் படத்தின் ரிசல்ட் தற்போது சன் பிக்சர்ஸை கடுமையான அப்செட்டாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெல்சன் திலீப்குமாரை நம்பி படத்தை தொடங்கலாமா இல்லை வேறு இயக்குநரை இயக்க வைக்கலாமா என்ற முடிவை ரஜினியிடமே விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் சன் பிக்சர்ஸ் இருப்பதாக் கூறப்படுகிறது.
அதேசமயம், இப்படி வெளியாகும் தகவல்கள் புரளிதான். பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சன் பிக்சர்ஸுக்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படவில்லை.
எனவே அடுத்த படத்தை திட்டமிட்டப்படி நெல்சனே இயக்குவார் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படியோ அடுத்த படத்திலாவது கதையிலும், திரைக்கதையிலும் நெல்சன் திலீப்குமார் கவனம் செலுத்த வேண்டுமென்பதே ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படிக்க | பீஸ்ட் படத்தை தான் போட வேண்டும் என திரையரங்கிற்கு மிரட்டலா? உண்மை என்ன!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!