திரையுலகில் ரன்பீர் கபூர்-ஆலியா பட் குறித்து பல கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் இருவரும் அதைப்பற்றி எதுவும் கூறால் மௌனம் காத்துவந்தனர், சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த ஜோடி காதலிப்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தது.  தற்போது இவர்களது திருமணம் குறித்த செய்தி வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வாரிசு நடிகர்களான இருவருமே பாலிவுட்டில் கலக்கி வருகின்றனர், கடந்த 2018ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மும்பையில் வீடு வாங்கும் சமந்தா! விலை இதனை கோடியா?


 


பாலிவுட்டில் கத்ரினா கைஃப் மற்றும் விக்கி ஆகியோரின் திருமணத்திற்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்டது ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் திருமணம் தான்.  இவர்களின் திருமண தேதி குறித்து தெளிவான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை, இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் இவர்களது திருமணம்  நடைபெறும் என்று கூறப்படுகிறது.  மேலும் கூடிய விரைவில் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ரன்பீர் கபூரின் தாயார் நீத்து கபூர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ராவை சமீபத்தில் சந்தித்து இருக்கிறார், எனவே இவர்களின் திருமண ஆடை வடிவமைப்பது தொடர்பாக அவரை சந்தித்து இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.



மேலும் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஆகியோரது திருமணம் மும்பையின், செம்பூர் பகுதியிலுள்ள ஆர்.கே.ஹவுசில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.  ஏற்கனேவே இவர்களது திருமணத்தை உதய்ப்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இவர்களின் குடும்பம் மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  நடிகர் ரன்பீர் காப்போர் ஏற்கனவே சோனம் கபூர் மற்றும் தீபிகா படுகோனே போன்ற பிரபலங்களுடன் உறவில் இருந்ததாக சில கிசுகிசுக்கள் வெளியான நிலையில் தற்போது இவர் நடிகை ஆலியா பட்டை கரம் பிடிக்க போகிறார்.



மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!


 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR