நெல்சன் திலீப்குமாரின் படங்களில் நடித்து பிரபலமான ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். இது குறித்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெடின் கிங்ஸ்லி:


கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுள் ஒருவர், ரெடின் கிங்க்ஸ்லி. இவர், 90களில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பின்னர், சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். இவர், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி, அவருக்கு நெருக்கமான நண்பர்களுள் இவரும் ஒருவர். நெல்சனின் இயக்கத்தில் முதன் முதலாக வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்து மக்களுக்கு பரீச்சியமான முகமாக மாறினார். 


“ஐய்ய..இப்போ என்ன அதுக்கு..” என இவர் கேட்கும் தோரணையும் சத்தமாக பேசும் தொனியும் பலருக்கும் பிடிக்கும். தொடர்ந்து இவர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட நெல்சனின் படங்களில் நடித்தார். அது மட்டுமன்றி, கடந்த சில ஆண்டுகளாக வெளியான பல ஹிட் படங்களில் இவர் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பார். தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். அடுத்து, வா வரலாம் வா என்ற படத்திலும், கங்குவா படத்திலும் நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கான்ஜுரிங் கண்ணப்பன்.. எந்த ஓடிடி தளத்தில் எப்போது ரிலீஸ்?


சீரியல் நடிகையை கரம் பிடித்த ரெடின்..!


நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு 46 வயதாகிறது. இவர், தமிழ் சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



திரையுலகினர் வாழ்த்து..


ரெடின் கிங்ஸ்லியின் திருமண புகைப்படங்களை திரையுலகினரும் ரசிகர்களும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ரெடினுடன் பீஸ்ட் படத்தில் சேர்ந்து நடித்த சதீஷ் குமார் “ப்ளாக் பஸ்ட்ர் வாழ்க்கைக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ