டோலிவுட் செல்லும் 'டாக்டர்' புகழ் ரெடின் கிங்ஸ்லி!

லிங்குசாமி இயக்கத்தில் ராம் போதினேனி நடிக்கும் 'The Warrior' படத்தில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2022, 11:05 AM IST
  • 'RaPo19' என்று பெயரிடப்பட்டு இருந்த இப்படத்திற்கு 'The Warrior' என்ற அதிகாரபூர்வமான தலைப்பு வைக்கப்பட்டது.
  • அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ள காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டோலிவுட் செல்லும் 'டாக்டர்' புகழ் ரெடின் கிங்ஸ்லி!  title=

லிங்குசாமி இயக்கத்தில், ஸ்ரீநிவாசா வெள்ளித்திரை தயாரிப்பில்  ராம் போதினேனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் 'The Warrior'.  இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைத்து இருக்கிறார்.  

ALSO READ | பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!

இப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது, பின்னர் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போன நிலையில் ராம் போதினேனி இப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தார்.  இப்படத்தில் ராம் போதினேனி போலீசாக நடிக்கிறார், இது வழக்கமான போலீஸ் சப்ஜெக்ட் படமாக அல்லாமல் சற்று வித்தியாசமான கோணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.  'RaPo19' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இப்படத்திற்கு சமீபத்தில்  'The Warrior' என்ற அதிகாரபூர்வமான தலைப்பு வைக்கப்பட்டது. 

Image

ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ள காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி (Redin Kingley) இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

redin

நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த இவர், 'டாக்டர்' படத்தின் மூலம் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.  இவர் தற்போது விஜயின் 'பீஸ்ட்' படத்திலும், சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் நடித்துள்ளார்.

ALSO READ | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News