குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர்   ரோமியோ பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள படம் "வீட்ல விசேஷம்" திரைப்படம். இப்படமானது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் படம் குறித்து நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், “ 'பதாய் ஹோ' இந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக போற்றப்படுகிறது. மேலும் அதன் பொழுதுபோக்குஅம்சங்களுக்காக அப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. 


நாங்கள் அதன் ரீமேக்கில் வேலை செய்யத் தொடங்கியபோது, ​​அதை ரீமேக் செய்யாமல், நமது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல், இங்குள்ளவர்களுக்கு  ஏற்றவாறு செய்ய நினைத்தோம். Zee Studios & Bayview Projects LLP தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும்   Romeo Pictures ராகுல் உட்பட அனைவரும்  வீட்ல விஷேசம் படத்தின் இறுதி வடிவத்தில் மிகவும் திருப்தியாக உள்ளனர். 



சமீபத்தில், ஜீ ஸ்டுடியோஸ் குழு உறுப்பினர்கள் மும்பையில் படத்தைப் பார்த்தனர்,  தொலைபேசி மூலம் அவர்களின் கைதட்டலைக் கேட்டது உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. வீட்ல விஷேசம் எங்கள் மொத்த குழுவினருக்கும் பெரும்  திருப்தியை அளித்துள்ளது. 


N.J.சரவணன் இந்தத் திரைப்படத்தின் வலுவான தூணாக இருந்துள்ளார். அவர் இப்படத்தை என்னுடன் இணைந்து இயக்கியுள்ளார்.  அவரது ஈடுபாடு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.  சத்யராஜ் சார், ஊர்வசி மேடம், அபர்ணா பாலமுரளி மற்றும் நட்சத்திர பட்டாளத்தில் உள்ள அனைவருமே இந்த படத்தின் ஆன்மா. அவர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் படம் முழுவதையும் கலகலப்பாக்கியிருக்கிறார்கள்.



வீட்ல விசேஷம் 100% ஃபேமிலி என்டர்டெய்னர் என்பதால், 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் பிற கல்வித் தேர்வுகள் முடிந்த பிறகு வெளியிட நினைத்தோம். தவிர, இந்தப் படத்தை குடும்பத்தினரும் நண்பர்களும் ரசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், எனவே ஜூன் 17 அன்று வெளியிட முடிவு செய்தோம். உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த  ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும்” என்றார்.


மேலும் படிக்க | விஜய்யுடன் புதிய படத்தில் இணையும் சிறுத்தை சிவா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR