விஜய்யுடன் புதிய படத்தில் இணையும் சிறுத்தை சிவா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன்முறையாக விஜய் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2022, 08:26 PM IST
  • சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விஜய்.
  • சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்.
  • விஜய் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
விஜய்யுடன் புதிய படத்தில் இணையும் சிறுத்தை சிவா! title=

'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் 'தளபதி 66' படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.  குடும்ப கதையம்சம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க, பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், குஷ்பூ, சங்கீதா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.  ஏற்கனவே தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க | ஒரே நாளில் ரிலீசாகும் சிம்பு மற்றும் தனுஷின் படங்கள்?

லோகேஷ்-விஜய் கூட்டணி அமைவது முதல்முறையல்ல, ஏற்கனவே விஜயை வைத்து லோகேஷ் மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார்.  இந்த படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகிவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  மீண்டும் இந்த இருவரது கூட்டணியில் உருவாகப்போகும் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.  அதனைத்தொடர்ந்து இயக்குனர் சிவா ஏற்கனவே விஜயை வைத்து படம் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியிருந்தார்.  கடந்த சில நாட்களாகவே சிவா இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா என்று சமூக வலைத்தளங்களில் பல யூகங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தது.

siva

மேலும் தற்போதைய தகவல்களின்படி, இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டதாகவும், இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகப்போகும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும், குடும்பங்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

[Source: V2Cinemas]

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜைவிட அதிக சம்பளம் வாங்கும் நெல்சன் திலீப்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News