சமீப காலங்களில் மிக அதிக அளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமௌளி இப்படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள  இந்தப் படம் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.ஆர்.ஆர் (RRR) படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல முன்னணி நடிகர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் ராஜமவுளியை புகழ்ந்து தள்ளினார். 


சிவகார்த்திகேயன் விழா மேடையில், "நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் இ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் எடுக்கிறார்கள் என்றால், நம்மை வைத்து கண்டிப்பாக இங்கு படம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னொரு பக்கம் அது பயம்.


அதே சமயம் ஈயை வைத்து எடுத்தாலே நன்றாக இருக்கு, எதற்காக இவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்து விடுவார்களோ என்ற பயம். அதுக்கு பிறகு அவரின் ஒவ்வொரு படங்களையும் ரசிக்க ஆரம்பித்தேன். எல்லோருக்கும் அவரின் பணி பிடிக்கும். என்னை மிகவும் கவர்ந்தது, இவ்வளவு பெரிய படங்களை, சாதனைகளை செய்து விட்டு அமைதியாக இருப்பது மிகவும் கஷ்டம். அதை தவம் போல செய்கிறார்கள் என நினைக்கிறேன்.


இங்கு நமக்கெல்லாம் ஒரு படம் ஓடிட்டாலே, ஹிட் கொடுத்துட்டோம்ல என நினைக்கும் போது, உலகம் முழுவதும் ஒரு படத்தை பார்க்க வைத்து விட்டு, அடுத்து என்ன பெரிசா பண்ணலாம்ன்னு யோசிக்கிறது ரொம்ப ஊக்குவிப்பதாக உள்ளது. சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நம்ம கனவை தாண்டியும் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் மிகப் பெரிய இன்ஸ்ப்ரேஷன். உங்களை பார்க்க வேண்டும் என்று தான் ஆவலாக இருந்தேன். இன்று பார்த்து விட்டேன்.



ALSO READ | 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!


இரண்டு சிங்கங்கள் என்றும் சொல்லலாம், இரண்டு புலிகள் என்றும் சொல்லலாம். இவர்களை தூரத்தில் இருந்து பெரிய திரையில் தான் பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் கடந்த முறை விருது விழாவிற்கு வந்த போது, என்னுடைய படத்தை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்ப்பார்கள் என கூறியது, இன்னும் நிறைய முயற்சி போட வேண்டும் என தோன்றியது. அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து வந்து இவ்வளவு எளிமையாக உள்ளீர்கள்.


இது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்க போகிறது. ஆர்ஆர்ஆர் படம் இந்திய சினிமாவின் பெருமையாக உள்ளது. இந்த படம் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். டிரைலரே மிரட்டலாக ஒரு படத்தை பார்ப்பது போல் ஷாட் ஷாட்டாக பார்க்க வைக்கிறது. இன்னும் படம் எப்படி இருக்குமோ என பார்க்க மிக ஆர்வமாக உள்ளேன்.


நான் கண்டிப்பாக முதல் நாள் முதல் ஷோ பார்க்க போறேன். நீங்களும் அனைவரும் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள். கொரோனாவால் சினிமா உலகமும் தியேட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2022 ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் வந்து மிகப் பெரிய வசூலை கொடுக்க போகிறது. அதைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை வரப் போகிறது. இந்த படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்தால் அதற்கு பிறகு வரும் எங்களின் படங்களும் ஓடும்" என்றார்.


“இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதற்கு காரணம் ராஜமௌலி மட்டும்தான். அவரது பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமௌலியிடம் சொன்னேன்.


என்னை நடனம் ஆட அழைத்தார்கள். சிவா வந்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு நடனம் வராது. சிலருக்கு நடனம் ஆடினால்தான் கழுத்து சுளுக்கும். இவர்கள் ஆடுவதை பார்த்தாலே எனக்கு கழுத்து சுளுக்கிக்கொண்டது. எனக்கு நடனம் சுத்தமாக வராது.


இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமௌலி (SS Rajamouli) கேட்டுக்கொண்டார். இப்போது RRR படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.


ஆர்.ஆர்.ஆர் படத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். அவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.


ALSO READ | டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR