கண்ணீர் சிந்த வைக்கும் ’உயிரே’ பாடல்.. RRR படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு!

ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பாக திரைக்கு வரவிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 3வது சிங்கிளான ‘உயிரே’ பாடல் இன்று வெளியிடப்பட்டது. 

Written by - S.Karthikeyan | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 26, 2021, 04:16 PM IST
கண்ணீர் சிந்த வைக்கும் ’உயிரே’ பாடல்.. RRR படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு! title=

ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வசூலில் மிகப்பெரிய சாதனைப் படைத்த இந்த திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக ராஜமௌலி (SS Rajamouli), ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள. 

இந்தப் படம் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் உருவாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். அவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் படம் தயாராகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. லைக்கா புரோடக்ஷன்ஸ் மற்றும் டிவிவி என்டர்டெயின்மென்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. இப்போது புரொடக்ஷன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சிங்கிள்கள் வெளியிடப்பட்ட நிலையில், இன்று ’உயிரே’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இதில் இயக்குநர் ராஜமௌலி (Director SS Rajamouli) மற்றும் லைக்கா புரொடக்ஷன் சார்பில் தமிழ் குமரன், டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் தானய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டனர். அப்போது பேசிய லைக்கா புரோடக்ஷன் தமிழ்குமரன், உலகளவில் பிரம்மாண்ட படைப்பாக ஆர்.ஆர்.ஆர் இருக்கும் எனக் கூறினார். இதுபோல் இன்னும் பல படைப்புகள் தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

ALSO READ | பிரமாண்டம்! 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா பேசும்போது, ஆர்.ஆர்.ஆர் (RRR Movie)திரைப்படம் தங்களுக்கு முக்கியமானது எனத் தெரிவித்தார். இது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் எனக் கூறினார். பின்னர் பேசிய இயக்குநர் ராஜமௌலி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரையும் சந்திப்பதாக கூறினார். அடுத்த மாதம் மொத்த படக்குழுவும் இதுபோன்ற ஒரு சந்திப்பினை நிகழ்த்த இருப்பதாக தெரிவித்த அவர், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பதாக கூறினார். ஒவ்வொரு காட்சிக்கு பின்னும் ஒரு எமோஷன் இருக்கும் எனக் கூறிய அவர், அந்த ஆத்மாவை வெளிக்காட்டும் வகையில் இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மரகதமணி எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்கமாட்டார், படத்தின் உயிர் எதுவோ, அதற்காக இசையமைப்பார் எனக் கூறிய ராஜமௌலி, உயிரே பாடல் அதனை உணர வைக்கும் எனக் கூறினார். மதன் கார்க்கி இந்தப் பாடலை கேட்கும்போது அழுதுவிட்டதாகவும் இயக்குநர் ராஜமௌலி குறிப்பிட்டார்.

ALSO READ |  ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News