'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

நடிகர் சூர்யா நடிக்கும்  'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2021, 07:38 PM IST
'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! title=

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'.  இப்படத்தில் வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S. பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது.  இப்பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, G.V.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர்.  "வாடா தம்பி" எனும் இந்த குத்து பாடலில் கிராமத்தான் கெட்டப்பில் சூர்யா மாஸாக ஆடியுள்ளார்.  இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

Et

இந்நிலையில் இப்படத்தின்  இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.  அதன்படி இன்று இந்த பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடலை யுகபாரதி எழுத பிரதீப்குமார், வந்தனிசம்,  பிருந்தாமாணிக்கவாசகன் என 3 பாடகர்கள் பாடியுள்ளனர்.  "அழகா..உள்ளம் உருகுதையா" எனத் தொடங்கும் இந்த பாடலில் நடிகர் சூர்யா முருகன் வேடத்தில் காட்சியளிக்கிறார்.  முழுமையான காதல் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.  சூர்யாவின் அழகை வர்ணித்தும், கதாநாயகி கதாநாயகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த காதலை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த பாடல் அமைந்துள்ளது.  மேலும் முருகன் மட்டுமல்லாது, கம்பீரமான பல வேடங்களிலும் சூர்யா இப்பாடலில் இடம்பெற்றுள்ளார். 

 

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நடிகர் சூர்யா, "ரொம்ப நாளுக்கு பிறகு நான் வெட்கப்பட வாய்த்த பாடல் இயக்குனரே இது" என்று நகைச்சுவையான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

ALSO READ | வலிமையில் அஜித்தின் கேரக்டர் பற்றி கூறிய H.வினோத்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News