Salaar Movie Latest Review, Actor Prabhas, Actress Shruti Haasan :‘கே.ஜி.எஃப்’ படத்தை இயக்கி பான்-இந்தியா அளவில் பெரிதளவில் ஹிட் அடித்த இயக்குநர் பிரசாந்த் நீல். இவரது அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது, சலார்-பார்ட் 1 சீஸ் ஃபயர். பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஸ்ருதி ஹாசன், மைம் கோபி, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் இந்திய அளவில் பெரிதாக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பினை சலார் படம் நிறைவு செய்ததா? இதோ விமர்சனம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதையின் கரு:


வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் ஸ்ருதி ஹாசனை கடத்த பல பேரைக்கொண்ட இரண்டு குழுக்கள் முயற்சி செய்கின்றன. இவர்களிடமிருந்து ஸ்ருதி ஹாசனை பிரபாஸால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை வருகிறது. ஆனால் பிரபாஸோ, தனது தாயிடம் கொடுத்த சத்தியத்திற்காக வம்பு-தும்புக்கு போகாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது தாயே “போய் அவளை காப்பாத்து” என கூறிய பிறகு, வெகுண்டெழுந்த வேங்கையாய் அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார் பிரபாஸ். இவரது எதிரியாய் முதல் பாதியில் காண்பிக்கப்படும் பிருத்விராஜ், இவருக்கு எதிரியாக மாறியது எப்படி என்பதை இரண்டாம் பாதியில் காண்பிக்கின்றனர். 


ஸ்ருதி ஹாசனை அத்தனை பேர் சேர்ந்து கடத்த முனைவது ஏன்? பிராபாஸிற்கும் பிருத்விராஜ்ஜிற்கும் பகைமை வளர காரணம் என்ன? பிரபாஸை பார்த்தாலே எதிரி கூட்டம் அஞ்சி நடுங்குவது ஏன்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடையாய் வருகிறது படத்தின் மீதி கதை. 


ஆக்ஷன் காட்சிகள் அமர்களம்..!


கே.ஜி.எஃப் படத்தின் ஹீரோவை ரசிகர்கள் மத்தியில் எப்படி நிலை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தாரோ, அதே போன்ற முயற்சிதான் சலார் படத்திலும் தொடர்ந்துள்ளது. ‘துப்பாக்கியாவது தோட்டாவாவது..கத்தி போதும்’ என்பது போல கையில் கிடைக்கும் ஆயுதங்களை எல்லாம் வைத்து எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார் பிரபாஸ். கண்டிப்பாக ஆக்ஷன் பட பிரியர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும். 


ஆக்ஷன் படத்திலும் செண்டிமெண்ட் இருந்தால்தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என தெரிந்து கொண்ட படத்தின் இயக்குநர் பிரசாந்த், சலார் படத்திலும் அதே செண்டிமெண்டை காண்பித்திருக்கிறார். ஆனால், அது கொஞ்சம் திணிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆக்ஷன் காட்சிகளில் கை-காலை அசைத்து ரசிகர்களை கவரும் பிரபாஸ், எமோஷனல் காட்சிகளில் நடிக்க தவறுவது ஏனோ தெரியவில்லை. 


படம் கொஞ்சம் நீ…ளம்..


சலார் படத்தின் மொத்த ரன் டைம், 2 மணி நேரம் 52 நிமிடங்கள். அதில் 2 மணி நேரம் சண்டை காட்சிகளே நிரம்பியிருக்கிறது. ஒரு அரை மணிநேரம், ஸ்லோ மோஷன் காட்சிகளும், பில்ட்-அப் காட்சிளும் இடம் பெற்றிருக்கின்றன. கட்டிங்-வெட்டிங் சரியாக இருந்திருந்தால் படத்தை இன்னும் பாராட்டியிருக்கலாம். இடைவேளை வரை ரசிகர்களை போர் அடிக்காமல் பார்க்க வைத்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் ஏனோ சொதப்பி விட்டது. 


மேலும் படிக்க | 6 நாள் நடித்து கொடுக்க இத்தனை கோடி சம்பளமா! அசரவைத்த கமலின் சம்பள விவரம்..


பெண்களை காப்பாற்றும் ஹீரோ…


சலார் படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கோ, பிற பெண் கதாப்பாத்திரங்களுக்கோ பெரிதாக வேலையே இல்லை. கடத்தல்காரர்கள் கையை பிடித்து இழுத்தால் அவர்களுடனேயே செல்வதும், பின்னர் பிரபாஸ் அவரை காப்பாற்றுகையில் அவர் மீது காதல் கொள்வதையும் தவிர ஸ்ருதி ஹாசன் வேறு எதையும் செய்யவில்லை. ஆரம்ப காட்சிகளில் பவர்ஃபுல்லாக காண்பிக்கப்பட்ட ரமா (ஸ்ரியா ரெட்டி), காட்சிகள் செல்ல செல்ல டம்மியாகிவிட்டார். 


மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்ததது. ஆனால், அவருக்கும் அதற்கேற்ற மாதிரியான கதாப்பாத்திர வடிவம் இல்லை. படத்தின் ஹீரோ பிரபாஸை கதையில் ‘கடவுள்-அரக்கன்’ போல அனைவரும் பார்ப்பது, ரசிகர்களை நகைப்புக்குள்ளாக்குகிறது. ஆனால் பிரபாஸ் ரசிகர்களுக்கு படத்தை மிகவும் பிடிக்கும். கிராஃபிக்ஸ், சண்டை காட்சிகளை எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம். 


மொத்தத்தில் ஆக்ஷன் படங்களை விரும்புபவராக இருந்தால், சலார் படத்தை கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பார்க்கவும். 


மேலும் படிக்க | 2023ம் ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் படங்கள்.. இதோ முழு லிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ