Year Ender 2023 : இந்த ஆண்டில் வெளியாகி இந்தியா முழுவதும் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் எவை என்று இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்…
2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பல தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த லிஸ்டில் 'ஜெயிலர்' மற்றும் 'லியோ' படமும் இடம்பிடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடியை வசூலித்தது.
ஆதிபுருஷ்: பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த ஜூன் 16ம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரூ. 353 கோடி வசூலித்துள்ளது.
ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி: ரன்வீர் கபூர் மற்றும் அலியாபட் இணைந்து நடித்திருந்த காதல் கதை ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’. கதை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் ரூ.355 கோடி ரூபாய் வசூல் செய்தது.
டைகர் 3: சல்மான் கான் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஏக் தா டைகர்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘டைகர் 3’. கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸில் ஒன்றாக உருவாகியது. இந்த ஆக்சன் திரைப்படம் ரூ. 466 கோடி வசூல் செய்துள்ளது.
ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். \இந்த திரைப்படம் ரூ. 607 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.341 கோடியை வசூலித்துள்ளது.
கதர் 2: தந்தையை தேடி இந்திய எல்லை தாண்டிவரும் பாசமிகு தனயனை பாகிஸ்தான் ஆர்மி இடமிருந்து காப்பாற்றுவதே நாயகனின் வேலையாக இருந்தது. உலக அளவில் கதர்2 கிட்டத்தட்ட 691 கோடி வசூலில் சாதித்தது.
அனிமல்: இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘அனிமல்’ திரைப்படம் 17 நாட்களில் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் ரூ.900 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதான்: ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியான இந்தி படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். பதான் திரைப்படம் உலகளவில் ரூ. 1050 கோடி கலெக்சன் ஆகியுள்ளது.
ஜவான்: கடந்த செப்டம்பர் மாதம் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜவான். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.