சமீப காலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே வெள்ளி திரையில் வாய்ப்பு குறைந்தாலும் சில பிரபலங்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. உடனே டக்கென்று சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இன்னும் ஒரு சிலருக்கு சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் அமோகமாக வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பியில் முன்னணியில் இருக்கின்றன. இதில் சீரியல்களின் தரத்தை பொறுத்து அடிக்கடி சேனல்கள் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகைவயில் சமீபத்தில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடிக்க சஞ்சீவ் ஒப்பந்தமானார். அத்துடன் இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.


மேலும் படிக்க | திரைப்படமாகும் வைரமுத்துவின் இந்த அற்புத நாவல்..வாவ் இவர்தான் ஹீரோவா?


இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது இவருடைய ஹீரோ கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த செய்தி வெளியான முதல் சஞ்சீவின் ரசிகரர்கள் அதிர்ச்சியாடந்துள்ளனர்.


முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் இவர் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் சீரியல் பிரபலம் அடைந்தார். மேலும், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பது மட்டுமில்லாமல் தொகுப்பாளராக டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.


மேலும் படிக்க | Dasara OTT: ரூ. 110 கோடி வசூல் செய்த தசரா... ஓடிடியில் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ