தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களுள் ஒருவர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 ஜனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. அதேபோல் இவர் பல நாவல்களையும் எழுத்தியுள்ளார்.
அந்த வகையில் தற்போது கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவல் திரைப்படமாக உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதேபோல் இந்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அதில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சென்சாரில் புதிய கட்டுப்பாடு... இனி வயது அடிப்படையில் படங்களுக்கு சான்றிதழ்!
முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்றது இந்த ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல். மேலும் இந்த நாவலை 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி - உருது -மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதனை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருந்தார்.
இந்த நிலையில் தற்போதுவரை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை செய்துள்ள இந்த நாவலை திரைப்படம் ஆக்க ’மதயானை கூட்டம்’, ‘ராவண கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சியான் விக்ரம் நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக மதுரை அருகே வைகை அணை கட்டப்பட்ட போது காலி செய்யப்பட்ட 14 கிராம மக்களின் போராட்டம் தான் இந்த நாவலின் கதை என்பதும் மண் சார்ந்த மக்களின் வலியோடு சொன்ன படைப்பு இந்த நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Dasara OTT: ரூ. 110 கோடி வசூல் செய்த தசரா... ஓடிடியில் எப்போது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ