'வில்லத்தனத்தில் பட்டாசு பாலுவாக இருந்து  நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக மாறிய ரங்கன் வாத்தியார்'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சினிமாவிற்கு வரவேண்டும் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து இருக்கிறது. சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால்  அழகு மட்டு போதாது, சிறந்த நடிப்பு திறமையும் தேவை என்பதற்கு இவரே  மிகச்சிறந்த ஒரு உதாரணம். இப்படி, தனது நடிப்பு திறமையை மட்டுமே வைத்து தனது அடையாளத்தை பதிவு செய்தவர் நடிகர் பசுபதி


பசுபதி குறித்த இந்த தகவல் தெரியுமா உங்களுக்கு?


பசுபதி, 1988 முதல் 1993 வரை ஆல் இந்தியா ரேடியோவில் ரெடியோ ஜாக்கியாக வேலை செய்தார். சில காலம் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார்.     


நடிகர் பசுபதி தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவராக மாறினார். வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனையிலும் இவர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்து இருக்கிறார். இவர் ஒரு மேடை கலைஞரும் கூட.  இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தூள், சுள்ளான், ஹவுஸ் புள், அருள், திருப்பாச்சி, விருமாண்டி போன்ற படங்களில் வில்லத்தனத்தின் உச்சக்கட்த்தை நம்  கண்முன் நிறுத்திருப்பர். 


திரைவாழ்க்கை: 


நடிகர் பசுபதி நடித்த முதல் படம் ஹவுஸ்புல். கமலின் மருதநாயகம் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவர்தான். ஆனால் அந்த படமே வெளியாகாமல் போனது. பின் விருமாண்டி படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தார். ஆளவந்தான் படங்களில் நடித்த பிறகு, பசுபதி நாசருடன் மாயன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் வில்லத்தனத்தை தாண்டி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு சிறப்பாக  பொறுத்திருப்பார். ஆரம்பத்தில் பசுபதி கொலைகார வில்லனாகத் தோன்றினார். தூள் படத்தில் ஆதியாகவும், சுள்ளான் படத்தில் சூரியாகவும் திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலுவாகவும் இவருக்கு வில்லன் முகங்கள் மட்டும் ஏராளம். 


மஜா, மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் வெடி குண்டு முருகேசன் போன்ற படங்களில் புதுவிதமாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் அற்புதமாக நடித்திருந்தார்.  இதற்குதானே ஆசை பட்டாய் பாலகுமாரா படத்தில் கொஞ்ச நேரத்திற்கு அண்ணாச்சியாக வந்தாலும் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். 


வெயிலில் பசுபதியின் பாத்திரம் தன்னிச்சையாக பார்வையாளர்களின் அனுதாபத்தைத் தூண்டியது. தேசிய விருது பெற்ற வெயில் திரைப்படத்தில் அவர் நடித்த பரிதாபமான பாத்திரம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 


ராமன் தேடிய சீதை:


பசுபதி RJ (நெடுமாறன்) ஆக பணிபுரியும் பார்வையற்ற நபரின் உறுதியான சித்தரிப்பைக் கொடுத்தார் மற்றும் வானொலி பார்வையாளர்களுடன் நிறைய நேர்மறையான ஆற்றலைப் பகிர்ந்து கொண்டார். பார்வையற்ற நிலை இருந்தபோதிலும் வானொலி வாயிலாக  அனைவரையும் ஊக்கப்படுத்திகொண்டிருப்பார். சேரனுக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்குவதற்காக வேண்டுமென்றே சேர்க்கப்பட்டது, ஒருவரின் வாழ்க்கையை பல பின்னடைவுகள் இருந்தபோதிலும், வாழ்க்கை வாழத் தகுதியானது. அந்த ஹீரோ தனது பேச்சுத் தடையால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையைக் கடந்து வந்தார். பசுபதியின் அதிர்வுறும் வார்த்தைகள், படத்தின் கருப்பொருளின் மையக்கருவாக இருந்தது. பசுபதிக்கு இது ஒரு சக்திவாய்ந்த பாத்திரம் மற்றும் அவர் அதை மிகவும் சக்தி வாய்ந்ததாக நடித்தார்.


மேலும் படிக்க | Aishwarya Rajesh: “ராஷ்மிகாவை நான் குறைகூறவில்லை..” புஷ்பா பட ஸ்ரீவள்ளி சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா விளக்கம்!


சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் 


சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பசுபதி ஏற்றிருந்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட்டாக மாறியது. சமூகவலைத்தளத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் மீம்ஸ் டெம்ப்ளட்டாக மக்களால் கொண்டாடப்பட்டது. வில்லனாக அவர் ஒரு கடினமான, வெறுக்கத்தக்க நபராக திரையில் நடித்தார். ஆனால் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 


பாசமிகு கதாப்பாத்திரங்கள்:


பசுபதியின் அடுத்த சிறப்பான கதாபாத்திரம், ரஜினி நடித்த குசேலன் படத்தில். அவரது கதாபாத்திரங்கள் அனைத்தையும் புத்துணர்ச்சியூட்டும் தென்றல் மற்றும் அன்பானதாக ஆக்குவதுதான். கருப்பன் திரைப்படத்தில் அவரது தங்கையுடன் விவரிக்க முடியாத சகோதர பிணைப்பு, ஆழமான ஊக்கமளிக்கும் சித்தரிப்பு, அவரது ஈடுபாடு மற்றொரு மைல்கல்லைக் கடக்கச் செய்தது. மாயியாக அவர் தனது தங்கை அன்புசெல்வியின் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டினார். 


திறமையான நடிகர்களிலும் தனித்துவம் மிகுந்த கலைஞர்கள் வெகு சிலரே இருப்பர். அந்த வெகுசிலரிலும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய நபர்களில் ஒருவர், நடிகர் பசுபதி. 


மேலும் படிக்க | Rekha Birthday: “பல மலர் டீச்சர் வந்தாலும் நம்ம ஜெனிபர் டீச்சர் போல வருமா..”ரேகாவின் பிறந்தநாள் இன்று


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ