தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவுக்கு பரதம் சொல்லிக் கொடுக்க மாஸ்டர் குடி போதையுடன் வீட்டுக்கு வந்த நிலையில் மகா அவரை வெளியே போக சொல்ல மதுமிதா நீங்க ஒரு ஸ்டெப் போட்டு காமிங்க என்று சொல்ல மாஸ்டர் பயங்கரமாக பரதம் ஆடியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 


டான்ஸ் மாஸ்டருக்கும் மகாவுக்கும் போட்டி


இதைத்தொடர்ந்து மகாவுக்குள் பயம் ஏற்படுகிறது, மறுபக்கம் சீதா அவரை வீட்டுக்கு வெளியே கூட்டிச்சென்று பயிற்சி எடுக்க மாஸ்டர் இனி இது சீதாவுக்கான போட்டி கிடையாது, எனக்கும் மகாவுக்கும் இடையே நடக்கும் போட்டி என சொல்கிறார். 




டான்ஸ் ஆட கற்றுக் கொள்ளும் ராம்


மேலும் ராமையும் கூட சேர்ந்து டான்ஸ் ஆட சொல்ல அவன் எனக்கு டான்ஸ் சுத்தமா வராது என சொல்கிறான். சீதா அதெல்லாம் கத்துக்கலாம் எனக்காக என்ன வேணாலும் செய்வேன்னு சொன்னீங்கல, என்னோட டான்ஸ் ஆடுங்க என்று சொல்ல வேறு வழியில்லாமல் ராம் டான்ஸ் ஆட கற்றுக் கொள்கிறான். 



மேலும் படிக்க | அப்பா ஆனார் ராம் சரண்.. 11 வருடங்களுக்கு பின் பிறந்த முதல் குழந்தை


அதிர்ச்சி அடைந்த ஜெயா மாஸ்டர் 


வீட்டுக்குள் மகா டென்ஷனாக உட்கார்ந்து இருக்க ஜெயா மாஸ்டர் என்னைவிட சென்னையில பெரிய பரதநாட்டியம் மாஸ்டர் யாரும் கிடையாது, எனக்கு வேணா அவங்க யாருன்னு தெரியாம இருக்கலாம் ஆனா அவங்களுக்கு என்னை நிச்சயமா தெரியும், என்னை பார்த்ததும் பயந்து ஓடிப் போயிடுவாங்க என்று சொல்லி சீதா அழைத்து வந்த மாஸ்டரை கூப்பிட அவர் திரும்பி பார்க்க ஜெயா மாஸ்டர் அதிர்ச்சி அடைகிறார்.



மேலும் படிக்க | மாமன்னன் படம் வெளியாகுமா? படத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!


அதன் பிறகு ஜெயாவுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்தது இவர்தான் என்பது தெரிய வர மகாவுக்கு இன்னும் அதிர்ச்சி அதிகமாகிறது. இருந்தாலும் ஜெயா மாஸ்டர் அவர் என்னதான் எனக்கு குருவாக இருந்தாலும் இந்த போட்டியில் நான் அவரை வெல்வேன் என சொல்கிறார். 


சீதா ராம் இடையில் அதிகரிக்கும் நெருக்கம்


அதன் பிறகு ராம் முதல் முறையாக டான்ஸ் பிராக்டிஸ் செய்ததால் அவனுக்கு கால் வலி வந்துவிட சீதா அவனது காலை பிடித்து விட இருவருக்கும் இடையே நெருக்கம் உருவாகிறது. ஒருவருக்கொருவர் காதலை பகிர்ந்து கொள்கின்றனர். 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ஏடாகூடமா போட்டோ இறக்கி இளசுகளின் பிபி-ஐ எகிற வைத்தா மீரா ஜாஸ்மின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ