சீதா ராமன்: 'சீதா என் பொண்டாட்டி.. அவளுக்குதான் என் சப்போர்ட்' அசத்திய ராம், ஆனந்தத்தில் சீதா

Seetha Raman Today's Episode Update: மகா செய்த வேலையால் கோபமான ராம்.. சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 19, 2023, 12:37 PM IST
  • பரத நாட்டியம் பிராக்டிஸுக்கு கிளம்பும் சீதா.
  • சீதா என்னுடைய பொண்டாட்டி: பதிலடி கொடுத்த ராம்
  • மதுமிதாவை அடக்கும் சீதா.
சீதா ராமன்: 'சீதா என் பொண்டாட்டி.. அவளுக்குதான் என் சப்போர்ட்' அசத்திய ராம், ஆனந்தத்தில் சீதா title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

இந்த சீரியலில் நடந்த சனிக்கிழமை எபிசோடில் ராம் சீதாவின் காலை பிடித்து விட சீதா தூக்கம் கலைந்து எழுந்து பாஸ் என்ன பண்றீங்க என்று கேள்வி கேட்ட நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

நான் சப்போர்ட் பண்ணுவேன்: சீதாவிடம் ராம்

சீதாவின் கேள்வியை தொடர்ந்து ராம் நீ ரொம்ப நல்ல பொண்ணு நீ ஜெயிக்கிறதுக்காக என்னால எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன் என சொல்கிறான். 

இதை கேட்டு சீதா சந்தோஷப்படுகிறாள். அதே சமயம் எனக்கு இந்த போட்டியை நெனச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு என்று பேச ராம் நீ எதுக்காக இந்த போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறாய் என்பதெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டாம். ஆனால் நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று சொல்ல சீதா எனக்கு இது போதும் பாஸ் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணாலே நான் ஜெயித்து விடுவேன் என்று சந்தோஷப்படுகிறாள். 

பரத நாட்டியம் பிராக்டிஸுக்கு கிளம்பும் சீதா

மறுநாள் காலையில் சீதா மற்றும் ராம் என இருவரும் பரத நாட்டியம் பிராக்டிஸ் கிளம்ப சீதா முத்தாரம்மனை வணங்கி விட்டு வருவதாக பூஜை அறைக்கு செல்ல ராம் தயாராகிக் கொண்டிருக்க இதனை அறிந்த மகா கேட்டை போட்டு சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விடுகிறாள். 

ராம், சீதா வெளியே செல்லும் போது கேட் பூட்டு போட்டு இருப்பதை பார்த்து செக்யூரிட்டியிடம் கேட்க அவன் மகா கேட்டை பூட்டி சாவி எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக சொல்ல ராம் சித்தி எதுக்காக இப்படி பண்றாங்க என கோபப்படுகிறான். 

மேலும் படிக்க | 5 நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு! இனி இவர்களால் நடிக்க முடியாதா?

சீதா என்னுடைய பொண்டாட்டி: பதிலடி கொடுத்த ராம்

மதுமிதா மகாவுக்கு பரிந்து பேச ராம் சீதா என்னுடைய பொண்டாட்டி நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என பதிலடி கொடுத்து மதுமிதாவை ஆப் செய்கிறான். சித்தி வரட்டும் இன்னைக்கு அவங்க கிட்ட கேட்கிறேன் என சீதா உடன் சேர்ந்து காத்துக் கொண்டிருக்கிறான்.

அதன் பிறகு மகா வந்ததும் ராம் அப்படியே பம்பி விட சீதா என்ன நீங்க ஏதோ கேக்குறன்னு சொன்னீங்க இப்ப அமைதியா இருக்கீங்க என்று கோபப்பட மதுமிதா நீ எதுக்கு அவரை ஏத்தி விடுற என சத்தம் போட சீதா அவர் என்னுடைய புருஷன் இது எனக்கும் அவருக்குமான விஷயம் என சொல்லி மதுமிதாவை அடக்குகிறாள். 

அதன் பிறகு மகாலட்சுமி நீ எதுக்கு இவ கூட வெளியே போயிட்டு இருக்க உனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு மதுமிதாவை கூட்டிக்கிட்டு கிளம்பு என்று சொல்கிறாள். நீ ப்ராக்டிஸ் பண்ணி அப்படியே ஜெயிச்சு கிழிக்க போற பாரு என மகா சீதாவை அவமானப்படுத்த சீதா ஏன் உங்களுக்கு நான் ஜெயிச்சிடுவேன்னு பயம் வந்துருச்சா என கேள்வி எழுப்ப மகா பதட்டம் அடைந்து உள்ளே செல்ல சீதா துரையிடம் அந்த பரதநாட்டியம் மாஸ்டர் இப்போ இங்க வந்து ஆகணும் என சொல்கிறாள். 

பிறகு துரை குடி போதையுடன் இருக்கும் மாஸ்டரை வீட்டுக்கு கூட்டி வர மகா இதை பார்த்து குடிச்சிட்டு ஆடுறதுக்கு பேரு பரதநாட்டியமா என கோபப்பட்டு அந்த மாஸ்டரை வெளியே போக சொல்கிறாள்‌. இந்த நேரம் பார்த்து மதுமிதா அவர ஒரு ஸ்டெப் போட சொல்லுங்க நல்லா இருந்தா மகாவே உள்ளே கூப்பிடுவாங்க என்று சொல்ல அந்த மாஸ்டர் டான்ஸ் ஆட தயாராகிறார்.  

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கேஜிஎப் யாஷ் உடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News