தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் சீதா மகாலட்சுமிக்கு சவால் விட்டு சென்ற நிலையில் அடுத்து மதுவுக்கு போன் செய்து அங்கு மகா வந்தாங்களா அவங்க சொல்றது எதையும் நம்பாதே அவங்க நல்லவங்க கிடையாது என பேச மதுமிதா கோபப்படுகிறாள். 


மேலும் படிக்க | Iswarya Menon: ஜிகுஜிகு உடையில் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த ஐஸ்வர்யா


மகாலட்சுமி ரொம்ப நல்லவங்க, என்கிட்ட மன்னிப்பு கேட்க தான் அவங்க குலசேகரப்பட்டினம் வந்திருந்தாங்க என சொல்ல சீதா அதிர்ச்சி அடைகிறாள். அதோடு நீ அப்பா சைடு தானே? அதனால தான் எனக்கு போன் பண்ணி மகாவ நம்பாதன்னு சொல்ற என கோபப்பட்டு போனை வைக்கிறாள். 


மறுநாள் காலையில் வாக்கிங் சென்று வந்த மகா, அர்ச்சனா மற்றும் சுபாஷ் ஆகிய மூவரும் சூர்யாவின் ஓனர் அட்ரஸ் கிடைப்பதாக பேசிக்கொண்டு திட்டம் ஒன்றை தீட்ட இதை சீதா ஒட்டு கேட்கிறாள். பிறகு மகாலட்சுமி அர்ச்சனா ஆகியோர் சூர்யாவை பார்க்க கிளம்ப சீதா நானும் வருகிறேன் என சொல்ல நாங்கள் எல்லோரும் கார்ல போறோம் நீ காருக்கு பின்னாடி ஓடிவா என மகாலட்சுமி நக்கலடித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறாள். 


இதனால் சீதா என்ன செய்வது என தெரியாமல் தவித்து நிற்க அப்போது ராம் ஆபிஸ் கிளம்ப உங்க சித்தி ஒரு பைலை மறந்து வச்சிட்டு போயிட்டாங்க அது அவங்ககிட்ட கொடுக்கணும் அந்த கார ஃபாலோ பண்ணுங்க என சொல்ல ராம் சீதாவை கூட்டிக்கொண்டு பைக்கில் செல்கிறான். 


போகும் வழியில் ஒரு சிறிய ஆக்சிடென்ட் நடக்க ரவுடிகள் சீதாவிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ய இதனால் கோபப்படும் ராம் அவர்களுடன் சண்டையிட்டு சீதாவை காப்பாற்றுகிறான். முதல்முறையாக தனக்காக ராம் சண்டை போட்டதை நினைத்து சீதா சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Modern Love Chennai: மாடர்ன் லவ் வெப் தொடரில் இணையும் 6 பெரிய படைப்பாளிகள் யார் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ