இந்திய அளவில் அதிக வசூல் சாதனை செய்த படம் எது தெரியுமா?
Highest Grossing Indian Movies: இந்தியாவில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, கோடிகளில் வசூலை அள்ளி வருகிறது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் கடைசியாக வெளியான பதான் படம் ஜனவரி 25 அன்று திரைக்கு வந்தது மற்றும் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்பதை நிரூபித்தது. பதான் உலகம் முழுவதும் ரூ. 1,050.3 கோடி வசூலித்து, 2023-ல் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துவரும் நிலையில் பதான் திரைப்படம் நல்ல வசூலை குவித்து திரை வர்த்தகர்களுக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. இந்தியாவில் இந்தி திரைப்பட வசூலில் முன்னதாக, முதல் நாளில் ரூ.55 கோடி வசூல் செய்து அதிக அளவாக இருந்த நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு 70 கோடி வசூல் மிகப்பெரிய முதல் நாள் சாதனையைப் பதிவு செய்ததால், பதான் முந்தைய எல்லா சாதனைகளையும் முறியடித்துவிட்டது. முதல் நாளில் பதான் படத்தின் மொத்த வசூல் 57 கோடி ஆகும்.
உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்கள்
தங்கல்
அமீர்கான் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.2000 கோடி வசூல் செய்தது. டங்கல் படத்தில் மல்யுத்த வீரர் மஹாவீர் போகத் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார்.
பாகுபலி 2
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,810 கோடி வசூல் செய்தது. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தது.
ஆர்.ஆர்.ஆர்
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த RRR உலகளவில் கிட்டத்தட்ட 1,258 கோடி ரூபாய் வசூலித்தது. இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் பணியாற்றினார்.
கேஜிஎஃப் 2
கேஜிஎஃப் 2 உலகம் முழுவதும் சுமார் ரூ.1,250 கோடி வசூலித்து கன்னட சினிமாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. KGF 2 என்பது 2018 இல் வெற்றி பெற்ற KGF படத்தின் தொடர்ச்சியாகும். கேஜிஎஃப் 2 படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பஜ்ரங்கி பைஜான்
சல்மான் கான் நடித்த இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.969 கோடி வசூல் செய்தது. பஜ்ரங்கி பைஜான் படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார் மற்றும் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பி.கே
ராஜ்குமார் ஹிரானி இயக்கிய பிகே படம் உலகம் முழுவதும் ரூ.769 கோடி வசூல் செய்தது. பிகேயின் நடிகர்கள் ஆமிர் கான், அனுஷ்கா சர்மா மற்றும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டனர்.
சீக்ரெட் சூப்பர் ஸ்டார்
சிறிய பட்ஜெட் படமான சீக்ரெட் சூப்பர் ஸ்டார் பாக்ஸ் ஆபிஸில் ரூ.966 கோடி வசூல் செய்தது. அத்வைத் சந்தன் இயக்கிய இப்படத்தில் அமீர்கான் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ