இந்தியாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தச் சூழலில் அவர் சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். படத்துக்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஷூட்டிங்கும் தொடங்கியது. ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.


தனுஷுக்கு இந்தப் படத்தில் மொத்தம் மூன்று தோற்றங்கள் இருப்பதாகவும், 1940களில் நடக்கும் ஆக்ஷன் படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அவருடன் சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் மற்றும் மூர் ஆகியோரும் நடித்துள்ளனர்.



இந்நிலையில் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கலாம் என பேச்சு எழுந்தது. அதை தற்போது பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், “லெஜெண்ட் நடிகரும் கருநாட சக்கரவர்த்தியுமான சிவராஜ்குமாரை வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.



முன்னதாக, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.


மேலும் படிக்க | 56 வயது நடிகருடன் பூஜா ஹெக்டே காதல்?...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ