கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு..படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் இதோ
STR 48 Shooting Update: கமலின் தயாரிப்பில் சிம்பு இணையவுள்ள அடுத்தப்படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி, தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'STR 48' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது, சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய திட்டமாக இந்த படம் அமைகிறது. தற்போது இப்படம் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது, அதன்படி கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படம் குறித்த அறிவிப்பை “கனவுகள் நிச்சயம் நனவாகும்” என்ற கேப்ஷனுடன் சிம்பு குறிப்பிட்டு இருந்தார். கமல் - சிம்பு கூட்டணி திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் சிம்புவின் சினிமா கேரியல் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் ஹீரோயினாக நடிக்க வைக்க தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, திஷா பதானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது.
மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!
மிகப்பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மிகப்பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் (STR 48) போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. பாகுபலி, RRR போன்ற படங்களைப்போல இப்படம்மும் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதால் சிம்புவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் எனவும் தெரிகின்றது.
சிம்புவுடன் தான் இணைய இருக்கும் இந்த படம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு வரலாற்று படமாக இருக்கும். இந்த படத்தில் இதுவரை யாரும் பார்க்காத சிம்புவின் மறுபக்கம் வெளிப்படும். இது மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் படப்பிடிப்புக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. தற்போது அனைத்தும் முடிவடைந்து ஷூட்டிங் செல்வதற்கான நேரம் வந்து விட்டது என தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார்.
முன்னதாக இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்திற்குப் பிறகு இவருக்கு எல்லாம் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல இந்த படங்கள் மூலம் போன வேகத்தில் திரும்ப வந்து விட்டார் என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ