தமிழ் சினிமாவின் அடுத்த ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு படத்திற்கும் அவருடைய மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது. டான் மற்றும் டாக்டர் திரைப்படம் மூலம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கிளப்பில் இணைந்திருக்கும் சிவகார்த்திகேயன், தமிழின் முன்னணி நாயகன் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார். டான் வெற்றிக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!


தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே 20 எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் முதல் படமும் இதுதான். உக்ரைன் நடிகை மரியா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். சர்பிரைஸாக அண்மையில் எஸ்கே 20 குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, விநாயகர் சதூர்த்திக்கு வெளியாகும் என்றும் அறிவித்தனர். அதற்கேற்ப படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.



இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் சிவகார்த்திகேயேனின் எஸ்கே.20 படத்திற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அண்மையில் வெளியான டான் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், இப்படத்துக்கான வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும் என இப்போதே கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 


மேலும் படிக்க | சூர்யாவுக்கு நேரில் சென்று சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கமல்ஹாசன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR