சூர்யாவுக்கு நேரில் சென்று சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கமல்ஹாசன்

சூர்யா வீட்டிற்கு நேரில் சென்ற கமல்ஹாசன், அவருக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்தார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2022, 05:38 PM IST
  • சூர்யா வீட்டிற்கு நேரில் சென்ற கமல்ஹாசன்
  • ரோலக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்தார்
  • சிவக்குமாரையும் நேரில் சந்தித்து உரையாடல்
சூர்யாவுக்கு நேரில் சென்று சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கமல்ஹாசன் title=

விக்ரம் படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரிலீஸான அவரின் ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. வசூல் ரீதியாக பெரும் சாதனைகளைப் படைத்து வரும் விக்ரம் திரைப்படம், இந்த ஆண்டில் ரிலீஸான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையையும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என வெளியிடப்பட்ட மொழிகளில் எல்லாம் நல்ல வரவேற்பு விக்ரம் படத்துக்கு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க | விக்ரம் குழுவினருக்கு பரிசுகளை அள்ளி வழங்கிய கமல்ஹாசன்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் படத்தை தயாரித்து நடித்த கமல், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான லெக்சஸ் லக்ஸூரி காரை பரிசாக வழங்கி அசத்தினார். துணை இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி பைக்குகளைக் கொடுத்தார். 

இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் சூர்யா வீட்டிற்கு சென்ற நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர், விக்ரம் படத்தில் மிகச்சிறிய ரோலில் நடித்த அவருக்கு நன்றியை தெரிவித்தனர். மேலும், விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ கதாப்பாத்திரத்தில் கலக்கிய அவருக்கு தன் கையில் கட்டியிருந்த ‘ரோலக்ஸ்’ வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்தார் கமல்ஹாசன். முன்னதாக கமல் வருவதை அறிந்த சூர்யா வீட்டின் வாசலுக்கே சென்று கமல் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு நடிகர் சிவக்குமாரையும் கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். 

மேலும் படிக்க | கமல்ஹாசனின் கரியர் பெஸ்ட்டா விக்ரம்? - உண்மை நிலவரம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News