SK 23: சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! ஹீரோயின் யார் தெரியுமா?
SK 23 Movie Shooting: ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.
SK 23 Movie Shooting Begins Check Cast and Crew List Here: தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரை ஹீரோவாக வைத்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், ஒரு படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படம்:
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.
தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக, புதுமையான களத்தில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக, ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும் என நம்பப்படுகிறது. இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
மேலும் படிக்க | Dhruv Vikram: துபாய் குடிமகனான துருவ் விக்ரம்! எப்படி தெரியுமா?
ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
21வது படத்திற்காக உடலமைப்பை மாற்றிய சிவா!
நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கியது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது உடலமைப்பை ஒட்டு மொத்தமாக மாறியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இதுவரை, கிராமத்து நாயகன் கதாப்பாத்திரங்களிலும், நகரத்து நாயகன் கதாப்பாத்திரங்களிலும் சாதாரணமாக நடித்து வந்த இவர், தற்போது கேரக்டர் ஆக்டிங்கும் செய்ய உள்ளார். நடிகர்கள் சூர்யா, விக்ரம், விஜய் உள்ளிட்டோர் கதைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்து உடலை மாற்றுகின்றனர். அப்படி படத்திற்காக கடின உழைப்பை போடும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.
மேலும் படிக்க | Arjun Das: மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்! இயக்குநர் இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ