Arjun Das: மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்! இயக்குநர் இவரா?

Arjun Das Malayalam Debut: மலையாள சினிமாவில் கால் பதிக்கும்  நடிகர் அர்ஜுன் தாஸ்  வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 14, 2024, 07:53 PM IST
  • அர்ஜுன் தாஸ் அடுத்து மலையாள படத்தில் நடிக்க உள்ளார்
  • இந்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?
  • இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Arjun Das: மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்! இயக்குநர் இவரா? title=

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் அர்ஜுன் தாஸ், அடுத்து ஒரு புதிய மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.

அர்ஜுன் தாஸ்:

கோலிவுட் திரையுலகில் முக்கிய ஹீரோவாகவும், வளர்ந்து வரும் ஹீரோவாகவும் இருப்பவர், அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் வில்லனாக நடித்து ‘லைஃப் டைம் செட்டில்மண்ட்’ டைலாக் பேசிய இவர், அந்த படம் வெளியானதை அடுத்து இவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து விக்ரம் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்தார். தொடர்ந்து புட்ட பொம்மா, அந்தாகாரம், அநீதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். இதை தொடர்ந்து இவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | அமெரிக்க டிவி ஷோவில் ஒளித்த விஜய்யின் “நான் ரெடி” பாடல்-வைரலாகும் வீடியோ!

மலையாள படத்தில் அர்ஜுன் தாஸ்:

நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர்  இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது கபீரின்  'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்' என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஹிருதயம்', குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.  படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அற்புதமான இந்த கூட்டணியின் அடுத்தகட்ட தகவல்கள் பற்றி அறியக் காத்திருங்கள்.

மேலும் படிக்க | Dhruv Vikram: துபாய் குடிமகனான துருவ் விக்ரம்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News