இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஸ்-ம் ரஜினியின் மூத்த மகளும் ஆன ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளனர். இது ரஜினி (Rajinikanth) மற்றும் தனுஷ் (Dhanush) ரசிகர்களிடையேயும், சினிமா உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ALSO READ | தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து


இதுகுறித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா (Aishwarya) கூறியதாவது, "18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


 



 


இந்த நிலையில் தற்போது அக்கா ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து அவரது தங்கை சௌந்தர்யா (Soundarya Rajinikanth) தனது முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளார். தனுஷ் உள்ளிட்ட மொத்த குடும்பமும் உள்ள புகைப்படத்தை வைத்திருந்த அவர் தற்போது ரஜினியுடன் அக்கா, தங்கை இருவரும் எடுத்த சிறுவயது புகைப்படத்தை மாற்றியுள்ளார்.


 



 


முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளுக்கு இதேபோல் விவாகரத்து செய்தார். பின்னர் சமீபத்தில் வெகு விமர்சியாக தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணத்தை செய்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.  சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | சூர்யாவுக்காக சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் எப்படி உள்ளது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR