பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyamமரணம் அடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் மூலம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPBமருத்துவமனையில் காலமானார். அவர் உயிரிழந்ததை மருத்துமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 5ஆம் தேதி கொரோனா தொற்று (CORONAVIRUS) காரணமாக எஸ்.பி.பி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திரைத்துறையினர், பிரபலங்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அவர் பாடிய பாடலை ஒலிக்கவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதை அடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன் உடல்நிலை சீராக தொடங்கியது.


 


ALSO READ | SPB மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது: கண்ணீர் மல்க பாரதிராஜா!!


இந்நிலையில் அவர் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. வியாழக்கிழமை அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் நேற்று நடிகரும், எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் மருத்துவமனை சென்று அவர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உயிரிழந்துவிட்டதாக வெங்கட் பிரபு (Venkat Prabhu) ட்வீட் செய்து தெரிவித்துள்ளார்.


 



 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


 


ALSO READ | SPB LIVE Updates: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார்