Sunny Leone Latest Photoshoot:  கருப்பு கலர் மேல் ஆடை மற்றும் லெக்கின் பேன்ட் அணிந்து ஸ்டைலா கெத்தா இருக்கும் படத்தை பகிர்ந்து பார்ப்பவர்களை மயக்குகிறார் நடிகை சன்னி. சொக்கி இழுக்கும் கண்கள் மற்றும் அலைபாயம் கூந்தல் என ஒட்டுமொத்தமாக பிரமிக்க வைக்கும் தோற்றத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். "வாழ்க்கை!" என்று தலைப்பிட்டு சில போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன்னி லியோன் தனது கடின உழைப்பால் தொழில்துறையில் தனக்கான முக்கிய இடத்தை வெற்றிகரமாக செதுக்கியுள்ளார். வேலையில் பிஸியாக இருந்தபோதிலும், அவர் நிஷா, ஆஷர் மற்றும் நோவா ஆகிய மூன்று குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களையும் நன்றாக கவனித்து வருகிறார். சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர்களைக் கொண்ட இந்த நடிகை, அடிக்கடி தனது ரசிகர்களுக்காக படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வதைக் காணலாம்.


இதற்கிடையில், சன்னி தனது வரவிருக்கும் தமிழ் திரைப்படமான 'ஓஎம்ஜி' (ஓ மை கோஸ்ட்) என்ற திகில் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். வா சக்தி மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் வெள்ளை குதிரை ஸ்டுடியோஸ் சார்பில் வீரசக்தி மற்றும் கே சசிகுமார் தயாரித்த இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திகில்-நகைச்சுவையில் உருவாகும் இந்த படத்தில், குக் வித் கோமாலி 2 புகழ் தர்ஷா குப்தா, காமெடி நடிகர் சதீஷ், யோகி பாபு மற்றும் டிக்டாக் நட்சத்திரம் ஜிபி முத்து ஆகியோரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். 


ALSO READ |  Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே..! பவித்ரா லட்சுமி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!


இந்தியத் திரைத்துறையில் நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பலரின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் புகைப்படம் பகிரும் போது, அது ரசிகர்களால் கொண்டாப்படுகிறது. நடிகை சன்னி லியோனுக்காக படம் பார்ப்பவர்களும் உண்டு.


ALSO READ |  வெச்சிருக்கா கண்ணுல கரெண்டு வயறு! ராக்ஷி கன்னா ரீசென்ட் க்ளிக்ஸ்!


 



 


ALSO READ |  உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்! நந்திதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!


 



 


ALSO READ |  நடிகை மகிமா நம்பியாரின் அழகிய புகைப்படங்கள்


 



ALSO READ | மஞ்சள் நிற சேலையில் அழகை காட்டும் நடிகை அதுல்யா ரவி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR