யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை ரஜினிகாந்த் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய ரஜினிகாந்த், “ஓம் குருவே சரணம். என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள் இது பாராட்டா திட்டா என எனக்கு தெரியவில்லை எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா ,பாபா திரைப்படங்கள்தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமய மலைக்கு சென்றதாக சொன்னார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர் ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன்.


மேலும் படிக்க | பிளாக்பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு! தயாரிப்பு இந்த நிறுவனமா?


இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும் அதை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல், வைட்டமின்  கிடைக்கும். இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதைவிட நோயளியாக இல்லாமல் செல்வது முக்கியம். 


மேலும் படிக்க | ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து


நோயாளியாக நாம் இருந்தால்  பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமாலேயே ஆரோக்கியமாக நடமாடி கொண்டிருக்கும்போது போய் சேர்ந்துவிட வேண்டும். நான்கூட இரண்டு முறை மருத்துவமனை போய்ட்டு வந்தவன்தான்.



புத்தி, சிந்தனை, நீ யார் எங்கிருந்து வந்தவன், சாதி என எல்லாம் சேர்ந்ததுதான் அறிவு, பணம்,புகழ்,பெயர் உச்சி. பெரிய பெரிய அரசியல்வாதிகளை  பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம் நிம்மதி என்பது 10 சதவீதம்கூட இல்லை. ஏனென்றால் சந்தோஷமும், நிம்மதியும் நிரந்தரம் கிடையாது” என்றார்.


மேலும் படிக்க | முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் - தேசிய விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ