Kollywood News: தமிழ் சினிமாவின் அதிரடி வசூல் நாயகன் சூர்யா. 'சூரரைப் போற்று' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிஸியாகி விட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது அடுத்த படத்தில் பாண்டிராஜுடன் இணைந்துள்ளார் நடிகர் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் 'சூர்யா 40' என அழைக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் இன்னும் அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டவுடன் இந்த படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதற்கிடையில், சூர்யா 40 படத்தின் கதைக்களம் பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: கர்ணன் பாணியில் நடிகர் சூர்யா: மாஸ் தகவல் வெளியீடு!


பெண்களுக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா (Actor Suriya) நடிக்கிறார் என்றும் இந்த கதாபாத்திரத்தை சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த கதையில், பொள்ளாச்சி சம்பவத்தின் சில உண்மை நிகழ்வுகளை படத்தில் இயக்குனர் சேர்க்கவுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், இந்த தகவலை தயாரிப்பாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 'சூரியா 40' படத்திலிருந்து முன்னர் கசிந்த புகைப்படங்களில் சூரியா ஒரு துப்பாக்கி மற்றும் கத்தியுடன் காணப்பட்டார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டின. 'சூரியா 40' இன் சுமார் பாதி பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், ஜூலை மாதம் முதல் வாரத்தில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 


சூரியாவின் பிறந்தநாளை ஒட்டி, சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (First Look Poster) ஜூலை 23 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில், பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்னவன்னன், சிபி, ஜெய பிரகாஷ் மற்றும் பிற பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.


முன்னதாக, சூர்யா 40 படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் இயக்குனர் பாண்டிராஜிடம் கேட்டபோது, அவர் ட்விட்டரில், " அன்பான ரசிகர்களே, 35% படம் முடிஞ்சுருக்கு. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் நடக்கும். டைட்டில் மாசா, முன்னரே அறிவிக்கப்படும். ஜூலை வரை காத்திருங்கள்" என்று கூறியிருந்தார். 


ALSO READ:NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR