லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் இன்றுவரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.  படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் பதியும்படியாக அமைந்திருந்தது, அந்த வகையில் இந்த படத்தில் சில நிமிடங்களே தோன்றிய சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்றது.  சில நிமிட காட்சியில் தோன்றிய சூர்யா மொத்த படத்தையுமே ஆதிக்கம் செலுத்தும் விதமாக இருந்தது, ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், சூர்யாவிற்கு ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசாக கொடுத்திருந்தார்.  அதேபோல கைதி படத்தில் கார்த்தியின் டில்லி கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதை வென்றது, இந்நிலையில் விக்ரம் படத்தை பார்த்ததிலிருந்து பல ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருந்தது ரோலக்ஸ் மற்றும் டில்லி இருவரும் எப்போது இணைவார்கள்? என்பது தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்த கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது என்றே சொல்லும்படியான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.  கார்த்தி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள 'விருமன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவானது மதுரையில் பல பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் லோகேஷுடன் இணையவாய்ப்பு இருப்பதாக சூசகமாக கூறியுள்ளார்.  'விருமன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், சூர்யா மேடைக்கு வந்ததும் நிகழ்ச்சி அரங்கில் குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரும் ரோலக்ஸ் என்று உற்சாகமாக கத்தி கூச்சலிட தொடங்கினர்.  



மேலும் படிக்க | 'தி லெஜெண்ட்' படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா?


அதனைத்தொடர்ந்து கார்த்தியை பற்றி சூர்யா மேடையில் புகழ்ந்து பேசினார், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த அவர் ரசிகர்களின் உற்சாகத்தை கண்டு ரோலக்ஸ் மற்றும் டில்லி என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.  அப்போது நடிகர் கார்த்தி ஏற்கனவே நாங்கள் இருவரும் சிறுவயதில் அதிகமாக சண்டைகள் போட்டிருக்கிறோம் என்று கூறினார், உடனே அவரை இடைமறித்த சூர்யா 'காலம் பதில் சொல்லும், அதுவரை காத்திருப்போம்' என்று கூறினார்.  இதனை கேட்டதும் ரசிகர்கள் ரோலக்ஸ் மற்றும் டில்லி இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.



மேலும் படிக்க | சைக்கிளிங் போட்டி - சூர்யாவுக்கு நன்றி கூறிய ஆர்யா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ