Thalaivar 170: நடிகர் ரஜினிக்கு சமீப காலங்களில் வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை எனலாம். வசூல் ரீதியாக பல கோடி ரூபாய்களை குவித்திருந்தாலும், ரஜினியின் படங்களுக்கே உரிய வரவேற்பு என்பது இவற்றில் கிடைக்கவில்லை. அந்த நிலையில், அவர் அண்ணாத்த பட தோல்விக்கு பின், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் என பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், விஜயை வைத்து இவர் இயக்கிய பீஸ்ட் படம் மிகப்பெரும் விமர்சனத்தை சந்தித்தது. இருப்பினும், ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பிறமொழி சூப்பர் ஸ்டார்களும் நடிக்கின்றனர். 


மேலும் இத்திரைப்படம் வரும் ஆக. 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் உள்ளிட்ட பிற பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, ரஜினி அவரது மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன், முதல் தோற்றமும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 


மேலும் படிக்க | ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் ஒரு ஜீரோ! வெளுத்து வாங்கிய அமைச்சர் ரோஜா!


இதற்கிடையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளது. ஜெய் பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. 


இது ரஜினியின் 170ஆவது திரைப்படமாகும். யாரும் எதிர்பார்க்காத வகையில் டி.ஜெ. ஞானவேலுக்கு ரஜினி வாய்ப்பளித்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பா. ரஞ்சித்தை போன்று சமூக அக்கறை கொண்ட இயக்குநராக பார்க்கப்படுவதினால் தான் டி.ஜெ. ஞானவேலுக்கு ரஜினி ஓகே சொல்லியுள்ளார் என தெரிகிறது.


இப்படத்தின் ப்ரீ-புரோடக்ஷன் பணிகள் நடைபெற்றுவதாகவும், கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விக்ரமை படக்குழு அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. கதை விக்ரமுக்கு பிடித்துவிட்டதால், தலைவர் 170ஆவது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை அவரே ஏற்று நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின்றன. 


விக்ரம் ஏற்கெனவே, லைகா நிறுவனத்தின் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். எனவே, ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டால் ரூ. 50 கோடி சம்பளமாக கொடுப்பதாக லைகா தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் உயிரை கொடுத்து நடிக்கும் விக்ரம், சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் என்று சொன்னால் யாருக்கு தான் பிடிக்காது. எனவே, இந்த ஜோடி இணைவதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ரஜினியின் செயலால் வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ