இனி சண்டை வேண்டாம்... இதுவரை அதிக வசூலை குவித்த 5 தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ!

Top 5 Tamil Movie Box Office Collection Records: இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த முதல் 5 திரைப்படங்களின் பட்டியலை இதில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 18, 2023, 08:16 PM IST
  • இந்த படத்தில் இரண்டு விஜய் படங்கள் இடம்பெற்றுள்ளன.
  • ரஜினி, கமல் படங்கள் தலா ஒன்று உள்ளது.
  • ஆனால், அஜித் படம் இதில் இடம்பெறவில்லை.
இனி சண்டை வேண்டாம்... இதுவரை அதிக வசூலை குவித்த 5 தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ! title=

Top 5 Tamil Movie Box Office Collection Records: கோலிவுட்டில் நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே சண்டை வருவது தற்போது சகஜமாகிவிட்டது. எம்ஜிஆர் - சிவாஜி  காலத்தில் தொடங்கி தற்போது வரை இந்த சண்டைகள் நடந்துதான் வருகிறது. இதில், மிகப்பெரிய பிரச்னை எந்த நடிகர்களின் படங்கள் அதிக நாள்கள் ஓடியது, அதிக வசூலை குவித்தது என்பதாகதான் இருக்கும். 

இதில், ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் ஒவ்வொரு பட்டியலை வைத்திருப்பார்கள். அதாவது, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் எந்த படங்கள் அதிக வசூலை குவித்தது என்ற பட்டியல்தான் அது. அந்த வகையில், இதுவரை தமிழ் திரையுலகில் அதிக வதூலை குவித்த படங்களின் பட்டியலை இங்கு காண்போம். 

பிகில்

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம்தான் பிகில். விஜய் - அட்லீ கூட்டணி வெளியான கடைசி படம் இதுதான். தெறி, மெர்சல் படங்களின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி, கால்பந்து விளையாட்டு குறித்து இத்திரைப்படத்தை உருவாக்கினர். இத்திரைப்படம் மொத்தம் 300 கோடி ரூபாயை குவித்து, இந்த பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

வாரிசு 

இதுவும் விஜய் படம்தான். வாரிசு, இந்தாண்டு பொங்கலையொட்டி வெளியான இப்படம் குடும்ப ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. மேலும், இத்திரைப்படம் இன்னும் சில திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இத்திரைப்படம் 310 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதில் இத்திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் படிக்க  | ஜெயம் ரவியின் அகிலன் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

விக்ரம் 

கடந்தாண்டு வெளியாகி, உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்த படம்தான் விக்ரம். கமலின் படங்களிலேயே இதுதான் அதிக வசூலை குவித்தது எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசித்த இத்திரைப்படம் திரையரங்கங்களிலும் நீண்டநாளாக ஓடியது. இத்திரைப்படம் ரூ. 432. 5 கோடி முதல் ரூ. 500 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் இதில், மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. 

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. முதல் பாகம் இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

2.O

ரஜினி - சங்கர் கூட்டணியில் பெரும் பொருட்செலவில் உருவான 2.O திரைப்படம்தான் முதலிடத்தில் உள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிய இந்த படமும் நல்ல வரவேற்பை உலகம் முழுவதும் பெற்றது. இத்திரைப்படம் ரூ. 625 கோடி முதல் ரூ. 800 கோடி வரை குவித்தது என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | AK62: அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டு! சூசகமாய் விக்னேஷ் சிவன் வைத்த அந்த பாடல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News