இந்தி படங்களில் நடிப்பதால் இந்தியில் தான் பேச வேண்டும் என்று கூறிய நபருக்கு நடிகை டாப்ஸி பதிலடி கொடுத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவாவில் நடைபெற்று வரும் 50-வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடிகை டாப்ஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாடினார். அப்போது பலர் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு நடிகை டாப்ஸி ஆங்கிலத்திலேயே பதில் கூறினார். அப்போது அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒருவர் நீங்கள் இந்திப் படங்களில் நடிக்கிறீர்கள் அதனால் இந்தியில் தான் பேச வேண்டும் என்ற தொனியில் கூறினார்.


உடனே கூட்டத்தைப் பார்த்து இங்கிருக்கும் அனைவருக்கும் இந்தி புரியுமா? என்று கேள்வி எழுப்பினர். பெரும்பாலானோர் தெஇயாது என்று கூற ஆங்கிலத்தில் தனது பேச்சைத் தொடர்ந்தார். ஆனால் தொடர்ந்து அந்த நபர் டாப்ஸியிடம் இந்தியில் பேச வலியுறுத்தினார். அந்த நபருக்கு சட்டென்று பதிலளித்த டாப்ஸி, நான் தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடிக்கிறேன். அப்படி என்றால் நான் இப்போது தமிழில் பேசவா என்று அந்த நபரிடம் கேள்வி எழுப்பினார். டாப்ஸியின் இந்த பதிலைக்கேட்டு அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது.


இதையடுத்து தென்னிந்திய சினிமா பற்றி பேசிய டாப்ஸி, எனக்கு நடிப்பு என்றால் என்ன, கேமரா என்றால் என்ன என்பதெல்லாம் தென்னிந்திய சினிமாதான் கற்றுக் கொடுத்தது. பாலிவுட்டில் நான் நுழைவதற்கு தென்னிந்திய சினிமாவை ஒரு பாதையாக நான் பார்த்ததில்லை. அது முட்டாள்தனமானது. நான் எப்போதுமே தென்னிந்திய சினிமாவை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றார்.