விஜய் நடித்த ஃப்ரண்டஸ், ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர நடிகை விஜயலட்சுமி.  இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இவர் நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது, இவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 


ALSO READ | Sushant Suicide Case: வைரலாகும் கங்கணாவின் அறிக்கை பற்றிய Whatsapp chat!!


தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு  ஒரு வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில், இது எனது கடைசி வீடியோ. கடந்த 4 மாதமாக சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன். நேற்று முன்தினம் ஹரிநாடார் பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் என்னை அசிங்கப் படுத்தியது போதும் என ஆகி விட்டது. இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். 


 


ALSO READ | கணவர் இறந்த வருத்தம் இல்லாமல்.. நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!!


 


சீமானை விடாதீர்கள். சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும். என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.