கோலிவுட் திரையுலகில், கடந்த சில ஆண்டுகளாக பல திறமை மிகு கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல பிரபலங்கள் வெவ்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளனர். இன்று, ‘எதிர்நீச்சல்’ தொலைக்காட்சி தொடர் புகழ் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு, டப்பிங் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் செய்திகளை வெளியிட்டு தங்களது சோகத்தினை தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவேக்:


பல்வேறு திறமை கொண்ட கலைஞர்கள் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே உள்ளனர். அதிலும் சமூக அக்கறை கொண்ட நடிகர்களை வெகு சுலபமாக இவர்கள்தான் என்று கைக்காட்டிவிடலாம். அப்படிப்பட்டவர்களுள் ஒருவராக இருந்தவர், விவேக். காமெடியனாக, சிறந்த நடிகராக, பாடகராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக இவர் சினிமாவில் புகுந்து விளையாடாத இடங்களே இல்லை. இவரை ரசிகர்கள் சின்ன கலைவாணர் என்றும் அழைப்பர். 2020ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா பரவ தொடங்கியது. இந்த நோய் தொற்றிற்கு தடுப்பூசி போட கூறி நடிகர் விவேக் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். இவர் இது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சில தினங்களில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாராடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்களால் இன்றளவும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. கடைசியாக ‘லெஜண்ட்’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். 


மேலும் படிக்க | “மாரிமுத்துவின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது..” நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!


கே.வி.ஆனந்த்:


ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். இவர் இயக்கத்தில் வெளிவந்த அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. ‘காப்பான்’படத்தை இயக்கிய பிறகு இவர் காதல்-அரசியல் கலந்த ஒரு கதையை இயக்க இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்த இவர், மாரடைப்பு ஏற்பட்டு 2021ஆம் ஆண்டு 30ஆம் தேதி உயிரிழந்தார். இறக்கும் போது இவருக்கு 51 வயது. 


ஈ.ராமதாஸ்:


கோலிவுட்டில் இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், நடிகராகவும் இருந்தவர் ஈ.ராமதாஸ். இவர் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், யுத்தம் செய், குக்கூ, காக்கி சட்டை, விசாரணை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ராஜா ராஜாதான், சுயம்வர உள்பட சில படங்களை இயக்கியும் உள்ளார். இவர், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த போதே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜனவரி 23ஆம் தேதி தனது 66வது வயதில் ராமதாஸ் உயிரிழந்தார். 



மயில்சாமி: 


துணை கதாப்பாத்திரங்களில் நடித்து, காமெடியனாக உயர்ந்து, ரசிகர்களின் கவனம் பெற்ற கலைஞராக வளர்ந்தவர் மயில்சாமி. இவர், சென்னையில் உள்ள ஒரு கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இவரது உயிர் பிரிந்து விட்டது. விவேக்கின் மரணத்தை அடுத்து ரசிகர்களை அதிகம் பாதித்த மரணம், இவருடையது. மாரடைப்பால் உயிரிழக்கும் போது இவருக்கு வயது 57. 


மனோபாலா:


இந்த வருடம் தமிழ் சினிமா இழந்த முத்தான கலைஞர்களுள் ஒருவர் மனோபாலா. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், காமெடியன், தொகுப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் மனோபாலா. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் என பல ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்துள்ளார். இவருக்கு இந்த ஆண்டில் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து சில நாட்கள் இவரை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்தனர். கல்லீரல் செயலிழந்து போனதால் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி தனது 69வது வயதில் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு மாரடைப்பால் ஏற்படவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்தது. 


ஆர்.எஸ்.சிவாஜி:


கமல் படங்களில் தவறாமல் நடிக்கும் குணச்சித்திர-காமெடி நடிகர்களுள் ஒருவர் ஆர்.எஸ்.சிவாஜி. “எங்கேயோ போய்ட்டீங்க சார்..” என்ற இவரது டைலாக் மிகவும் பிரபலம். கடைசியாக ‘கார்கி’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2ஆம் தேதி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 66. இவரது மரண செய்தியை அடுத்து பலர் தமிழ் சினிமா இன்னொரு பெரிய கலைஞரை இழந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தனர். 


மாரிமுத்து:


சீரியல் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருந்தவர் மாரிமுத்து. இவர், புலிவா, கண்ணும் கண்ணும் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். எதிர்நீச்சல் தொடரில் வரும் ‘ஆதி குணசேகரன்’ கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம். இவர் தனது 58வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | “ஜோசியர்களை மோசமா பேசினா இப்படி தான் மாரிமுத்து”.. ச்சீ இவ்வளவு கேவலமா பேசாதீங்க..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ