பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்த பிரபல காமெடி நடிகர் மனோபால காலமானார். 

Last Updated : May 3, 2023, 03:31 PM IST
  • பிரபல நடிகர் மனோபாலா உயிரிழந்தார்.
பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் title=

தமிழ் படங்களில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த மனோபால,  இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 69 வயதான இவர், கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மனோபாலா காலமானார்:

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்தவர் மனோபாலா. 45 ஆண்டுகளாக பல திரைத்துரையில் இருந்த அவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கடந்த மாதம், மனோபாலாவிற்கு உடல் நலனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 10 நாட்களாக அவரது இல்லத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அந்த சிகிச்சைகள் பலனலிக்காத நிலையில் இன்று மனோபாலா இந்த மன்னுலகை விட்டு மறைந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த திரைத்துறையினர், தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | சித்ரா பவுர்ணமி நெருங்குகிறது! பொம்மிக்கு என்ன ஆகும்? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

மனோபாலாவின் திரை வாழ்க்கை:

1970களில் திரைதுறைக்குள் நுழைந்தவர், மனோபாலா. பாரதி ராஜாவிடம் உதவி இயக்குநராக அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு, துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். ரஜினி-கமல் முதல் விஜய்-அஜித் வரை தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து விட்டார் மனோபாலா. இவரது இறப்பு செய்திகை கேட்ட திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பிரபலங்கள் இரங்கல்:

நடிகர் ரஜினிகாந்த், “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இன்று, பிச்சைக்காரன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொடங்குவதற்கு முன்னர் உயிரிழந்த மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்தார். பிரபல நடிகர் கௌதம் கார்த்திக், நடிகரும் இயக்குநருமான மனோபாலாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அன்று மயில்சாமி..இன்று மனோபாலா

குணச்சித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் கலக்கி வந்த நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். 57 வயது நிரம்பிய அவர், மாரடைப்பு காரணமாக இந்த உலகை விட்டு மறைந்தார். உதவி தேவைப்படுவோருக்கு ஓடி ஓடி உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவர் மயில்சாமி. இவரது இறப்பு செய்தியின் காயமே இன்னும் ஆறாத நிலையில், இன்று மனோபாலாவும் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரது இறப்பும் திரையுலகினர் மத்தியில் பேரிழப்பாக கருதப்படுகிறது. 

இறுதிசடங்கு:

உயிரழந்த நடிகர் மனோபாலாவின் இறுதிசடங்கு நாளை காலை 10 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது. மனோபாலாவின் இல்லத்திற்கு அவரது ரசிகர்கள் பலர் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மனோபாலாவிற்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக திரையுலகினர் பலர் நாளை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி’ எஸ்.கே 21 படத்தில் இணையும் ஜி.வி பிரகாஷ் குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News