சமீப காலங்களாக பல ஓடிடி தளங்களின் வளர்ச்சிகள் அதிகரித்து வந்தாலும், திரையரங்குகளில் படங்கள் வெளியாவதும், அவற்றை பார்க்க ரசிகர்கள் குவிந்து வருவதும் என்றும் குறையப்போவதில்லை. அந்த வகையில், இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் படங்களை பார்க்கலாமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவான்:


‘பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள படம், ஜவான். இந்த படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் இயக்குநர் அட்லி இயக்குயுள்ள படம் இது. இதில் விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும் ட்ரைலரும் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களும் இதற்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். படம், நாளை (செப்., 7) திரையரங்குகளில் வெளியாகிறது. ஜவான் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதால் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தி நன்:


ஹாரர் பட ரசிகர்களே! நன் தரிசனத்தை பார்க்க தயாரா..? ஆங்கில பேய் படங்களுக்கு என இந்தியாவில் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 2018 ஆம் ஆண்டு வெளியாகி பலருக்கும் பீதியை கிளப்பிய பேய் படங்களுள் ஒன்று, ‘தி நன்’. இதன் அடுத்த பாகம் நாளை (செப்., 7) வெளியாகவுள்ளது. இதில், முதல் பாகத்தில் இருந்த கதாப்பாத்திரங்கள் அப்படியே தொடர உள்ளன. போனி ஆரோன்ஸ் என்பவர், கன்னியாஸ்திரி பேய் கதாப்பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இன்னும் சில புது கதாப்பாத்திரங்களும் இப்படத்தில் இடம் பெற உள்ளன. ஆங்கிலத்தில் வெளியாகும் இந்த படத்தை தமிழ் மற்றும் இந்தி டப்பிங்கிலும் கண்டு ரசிக்கலாம். 


மேலும் படிக்க | இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?


தமிழ்க்குடிமகன்:


இசக்கி கார்வண்னன் இயக்கி தயாரித்துள்ள படம், தமிழ்க்குடிமகன். “மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்குள் சாதி எப்படி வந்தது?” என்ற கருவை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், இயக்குநரும் நடிகருமான சேரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லால், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மு.ராமசாமி, ஸ்ரீ பிரியங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 


மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி:


அனுஷ்கா நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றும் படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேடை கலைஞர் நவீன் பாலிஷெட்டி நடித்துள்ளார். நாசர், ஜயசுதா, துளசி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சிரஞ்சீவி பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம், நாளை வெளியாகிறது. தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தை தமிழ் டப்பிங்கிலும் நாளை திரையரங்குகளில் பார்க்கலாம். 


செப்டம்பர் 8 வெளியாகும் படங்கள்:


நாளை மட்டுமன்றி, செப்டம்பர் 8ஆம் தேதியும் சில படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


நூடுல்ஸ்:


ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம், நூடுல்ஸ். தற்போதைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறைவான பட்ஜெட்டுடன் தயாராகும் பல நல்ல படங்கள் மக்களை போய் சென்றடைகின்றன. அந்த வகையில், நூடுல்ஸ் படமும் அப்படியொரு படைப்பாக உருவாகியுள்ளது. இதில், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த் பாரு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருவி, மாவீரன், அயலி ஆகிய படைப்புகள் மூலம் பிரபலமான மதன் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கிறார். இந்த படம், நாளை மறுநாள் (செப்., 8) திரையரங்குகளில் வெளியாகிறது. 


>சத்யராஜ் நடிப்பில் தயாராகியுள்ள படம், அங்காரகன். இந்த படமும் செப்டம்பர் 8ஆம் தேதியன்று வெளியாகிறது. 


>விமல் நடிப்பில் தயாராகியுள்ள துடிக்கும் கரங்கள் படம், நாளை மறுநாள் வெளியாகிறது. இதில், நடிகர் சதீஷ் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். 


>நடிகர் சூர்யாவின் பிரபலமான பஞ்ச் டைலாக்கான “ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்றா..” திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை சிவா.ஜி என்பவர் இயக்கியிருக்கிறார். நடிப்பும் தயாரிப்பும் இவரே. 


மேலும் படிக்க | “இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ